கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சீமான் - நாளுக்கு நாள் சிரிப்பாய் சிரிக்கும் மேடை நாகரிகம்!

கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சீமான் - நாளுக்கு நாள் சிரிப்பாய் சிரிக்கும் மேடை நாகரிகம்!

Update: 2019-10-21 12:10 GMT

தமிழக அமைச்சர்களை தரைக்குறைவாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவு களின் கீழ் தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான பிரேம், தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.


அதில் நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த சீமான், தூத்துக்குடியில் தங்கியிருந்தபோது அளித்த பேட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், அமைச்சர்களையும் தரைக்குறைவாக பேசியதாகவும், இதற்காக சீமானை கைது செய்யவேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு மீது தென்பாகம் காவல்நிலைய ஆய்வாளர் கிருஷ்ணகுமார் விசாரணை நடத்தினார். இதையடுத்து காவல்நிலையத்தில் சீமான் மீது அவதூறாக பேசியது, கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


ஏற்கனவே சீமான் பல பிரச்சார மேடைகளில் அரசியல் கட்சி தலைவர்களை ஒருமையில் பேசியும், தரக்குறைவாக பேசியும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் அதே காரணத்துக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யபட்டது நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது


Similar News