தெலங்கானா கவர்னர் Dr.தமிழிசைக்கு முக்கியத்துவம் !! டெல்லி வட்டாரங்கள் வியப்பு

தெலங்கானா கவர்னர் Dr.தமிழிசைக்கு முக்கியத்துவம் !! டெல்லி வட்டாரங்கள் வியப்பு

Update: 2019-10-20 07:17 GMT

பொதுவாக மாநில கவர்னர்கள் தங்கள் தரப்பு அலுவலக விஷயங்கள் எதுவாக இருந்தாலும் உள் துறை அமைச்சகம் மற்றும் அமைச்சரை மட்டுமே சந்தித்து பேசுவர். பிரதமரிடம் பேச விரும்பினாலும் பேசலாம். ஆனால் பிரதமர் மோடி சமீபத்தில் கவர்னர்கள் எந்த விஷயமானாலும் இனி தன்னை சந்திக்க வரவேண்டாமென்றும், உள்துறை அமைச்சரை சந்தித்தால் போதும் என்று கூறிவிட்டாராம்.


இந்த நிலையில் டெல்லி செல்லும் மாநில கவர்னர்கள் யாரும் பிரதமர் மோடியை சந்திக்க முடியாத நிலையில் கவர்னர் பதவி ஏற்றதும் டெல்லி சென்ற தமிழிசை முதலில் உள்துறை அமைச்சரை சந்தித்தார். அதன் பிறகு எந்த தடையும் இன்றி பிரதமர் மோடியையும் சந்தித்து பேசிவிட்டு வந்தாராம்.    


மோடியிடம், தெலுங்கான விவகாரங்கள் குறித்து, தமிழிசை ஆலோசனை நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் நிலை குறித்தும், பேசியதாக சொல்லப்படுகிறது.


கவர்னர்களைச் சந்திக்க தவிர்க்கும் பிரதமர், தமிழிசையை சந்திக்க எப்படி ஒப்புக் கொண்டார் என, டில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் ஆச்சர்யப்படுகின்றன என பிரபல பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. 


Similar News