ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சத்ரபதி சிவாஜி வழிபட்ட தமிழகத்தின் முக்கிய கோவில் - எந்த கோவில் தெரியுமா?

ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சத்ரபதி சிவாஜி வழிபட்ட தமிழகத்தின் முக்கிய கோவில் - எந்த கோவில் தெரியுமா?

Update: 2019-11-06 07:31 GMT

காந்தியடிகளுக்கு தமிழ் கற்று தந்த தமிழ்பண்டிதர் வி.நடேசனார் தமிழில் புலமை பெற்ற பண்டிதர் வி.நடேசனார் சுமார் 12 ஆண்டு காலம் சென்னை மாகாண சிறப்பு ஜெனரல் நீதிபதியாக இருந்தவர். இவர் காலகட்டத்தில் பெரும் தலைவர்களாக கருதப்படும் முன்னாள் குடியரசு தலைவர்கள் வி.வி.கிரி, ஜெயில்சிங், முன்னாள் இந்திய பிரதமர்கள் ஜவகர்லால் நேரு இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, தமிழக முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா உள்ளிட்ட முக்கிய தலைவர்களோடு நெருங்கிய நட்புடன் இருந்துள்ளார்.


சென்னை பாரிமுனையில் புகழ் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த காளிகாம்பாள் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு மராட்டிய மன்னரான வீர சத்ரபதி சிவாஜி வந்து வழிபட்டுள்ளார். என்பதை ஆதாரத்துடன் தமிழக அரசுக்கும், திருக்கோவிலின் நிர்வாகத்திற்கும் கூறியவர் பண்டிதர் வி.நடேசனார்.


கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் 1974 ஆண்டு வரை இவர் சென்னை பாரிமுனையில் உள்ள புகழ்பெற்ற காளிகாம்பாள் ஆலயத்தில் அறங்காவலராக பொறுப்பு வகித்துள்ளார். அறங்காவலராக இருந்த காலத்தில் , வரலாற்று சார்ந்த நூல்களை படித்து அதை ஆய்வு செய்து வந்துள்ளார் தமிழில் புலமை பெற்ற பண்டிதர் வி.நடேசனார் . அந்த வரலாற்று ஆய்வின் போது தான் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சென்னை காளிகாம்பாள் ஆலயத்திற்கு வந்த அம்மனை தரிசித்துள்ளார் என்பதை கண்டறிந்து அதை வெளியிட்டுள்ளார்.


இவர் இந்த தகவலை வெளியிட்ட பிறகு தான் அக்கோவிலின் தல வரலாற்றில் மாராட்டிய மன்னர் சிவாஜி பற்றி பதியப்பட்டது. இத்தகவல் குறித்து வி. நடேசனார், 1974ஆம் ஆண்டில் வெளிவந்த சுதேசமித்திரன் இதழுக்கு கட்டுரை எழுதியுள்ளார் , இக்கட்டுரையின் தலைப்பு சத்ரபதி சிவாஜி தரிசித்த சென்னைக் காளியம்மன் அதில், அவர் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார் அப்போதைய வழக்கு முறைப்படி ’’தெய்வங்களின் பெயரையே மக்களுக்கு சூட்டும் வழக்கம் இருந்துள்ளது அது தற்போது வரை தொடர்ந்து வருகிறது. சென்னப்ப நாய்க்கனுக்குப் பெயரிடக் காரணமானவள் சென்னைக்குப்பத்தின் காளியம்மனே. இக்காளியம்மனுக்கு மீனவரும் பிறரும் செந்தூரம் பூசி வழிபட்டதால் அத்தேவி சென்னம்மன் ஆயினள்; செம்மேனியம்மான் சென்னப்பன்(சிவன்)என்றும், செந்நிறக்காளி சென்னம்மன்(சிவை)என்றும் போற்றினர். சிவாஜி மகாராஜா 3.10.1677ல் சென்னைக்கு வந்தார். ஸ்ரீனிவாசன் எழுதிய ’கருநாடகத்தில் மராட்டியராட்சி’என்ற நூலின் 163ம் பக்கம்தான் இதற்கு ஆதாரமாக உள்ளது. என்கிறது அவரது கட்டுரைகள் 31.05.74 ல் 300 ஆம் ஆண்டு சிவாஜியின் மகுடாபிஷேக விழாவும், கோபூஜையும், தேரோட்டமும், பொதுக்கூட்டமும் இக்கோயிலில் நடந்தன’’என்று குறிப்பிட்டுள்ளார்.





இக்காளியம்மனுக்கு மீனவரும் பிறரும் செந்தூரம் பூசி வழிபட்டதால் அத்தேவி சென்னம்மன் ஆயினள்; செம்மேனியம்மான் சென்னப்பன்(சிவன்)என்றும், செந்நிறக்காளி சென்னம்மன்(சிவை)என்றும் போற்றினர். சிவாஜி மகாராஜா 3.10.1677ல் சென்னைக்கு வந்தார். ஸ்ரீனிவாசன் எழுதிய ’கருநாடகத்தில் மராட்டியராட்சி’என்ற நூலின் 163ம் பக்கம்தான் இதற்கு ஆதாரமாக உள்ளது. என்கிறது அவரது கட்டுரைகள் 31.05.74 ல் 300 ஆம் ஆண்டு சிவாஜியின் மகுடாபிஷேக விழாவும், கோபூஜையும், தேரோட்டமும், பொதுக்கூட்டமும் இக்கோயிலில் நடந்தன’’என்று குறிப்பிட்டுள்ளார்.





அதுமட்டுமில்லமல் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி வழிபட்டு வந்த தேவி,பவானியே. அவர் சிவசக்தியை நம்பி வாழ்ந்தவர், என்றும் எதையும் அம்மனை கேட்டுசெய்பவர். அந்த தெய்வங்களும் சத்ரபதி சிவாஜி உள்ளத்தில் தோன்றி சரியா தவறா என உணர்த்துவாள். கடவுள் ஸ்ரீதேவி அம்மனை தரிசித்து சென்று அவள் உணர்த்தும் வழியில் நடந்து ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் அதில் வெற்றியும் கண்டுள்ளார். கடவுள் அருளாசியால்.


source: https://www.nakkheeran.in/special-articles/special-article/chennai-kalikambal-kovil


Similar News