ப.சிதம்பரம் கைது! அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி ஆணவத்தின் உச்சத்தில் ஆட்டம் போட்டவர் கொட்டம் அடங்கியது !!

ப.சிதம்பரம் கைது! அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி ஆணவத்தின் உச்சத்தில் ஆட்டம் போட்டவர் கொட்டம் அடங்கியது !!

Update: 2019-08-21 16:44 GMT

முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது.


இதையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. உடனே அவர் தலைமறைவாகி விட்டார்.


ப.சிதம்பரம், வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே, முன்ஜாமீன் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை, அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.


இந்நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “எங்களது கருத்தை கேட்காமல் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது” என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.


இந்த நிலையில் ப.சிதமப்பரத்தை அவரது இல்லத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.


இதன் மூலம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆட்டம் போட்ட ப.சிதம்பரமும் சட்டத்திற்கு முன் சமம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


Similar News