முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமறைவு! சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வலை வீச்சு!!
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமறைவு! சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வலை வீச்சு!!
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சிதம்பரத்தை கைது செய்து, விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டில்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.
இதனால் சிதம்பரத்தின் வீட்டு வாசலில், தாங்கள் கொண்டு வந்த நோட்டீசை அதிகாரிகள் ஒட்டிவைத்து விட்டு சென்றனர். அதில், இன்னும் 2 மணி நேரத்தில் சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி டுவீட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், "நேர்மையற்ற சிதம்பரம் தலைமறைவாகி உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வலைவிரித்து தேடி வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
ப.சிதம்பரத்தின் மொபைல் போன், அவரது உதவியாளர் மொபைல் போன், அவரின் கார் டிரைவர் போன் அனைத்தும் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளன.