11 நாடுகளில் சொத்து குவித்துள்ள சிதம்பரம். ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லையாம்!

11 நாடுகளில் சொத்து குவித்துள்ள சிதம்பரம். ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லையாம்!

Update: 2019-08-26 06:26 GMT

ஐ.என்.எக்.ஸ் மீடியாக முறைகேடு வழக்கில், ப.சிதம்பரம் கடந்த வாரம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். டில்லி சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்திற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, பிரான்ஸ், உள்ளிட்ட 11 நாடுகளில் சொத்து இருப்பதாக அமலாக்கதுறை சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்று முடிவடைகிறது. இந்நிலையில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் முயற்சியில் அமலாக்கத்துறை இறங்கி உள்ளது. ஆனால் சிதம்பரத்தின் ஜாமீன் கோரும் மனு இன்றும் பட்டியலிடப்படவில்லை.


இதற்கிடையில், டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்வதை தடுப்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டது. இருப்பினும் ஏற்கனவே 5 நாட்கள் சிபிஐ காவல் வழங்கப்பட்டுள்ளதால், காவல் முடிந்த பிறகு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி, ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில் சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ காவல் இன்றுடன் முடிவதால், இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை எனக்கூறி சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க கோரி கோர்ட்டில் கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், சிபிஐ.,யை தொடர்ந்து சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையும் திட்டமிட்டுள்ளது. இதற்கான முயற்சிகளையும் அமலாக்கத்துறை ஏற்கனவே துவக்கி விட்டதாக கூறப்படுகிறது.


இதனால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் சிபிஐ காவல் நீட்டிக்கப்படுமா, அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைக்குமா அல்லது சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகளின் பட்டியலில் சிதம்பரத்தின் மேல்முறையீட்டு வழக்கு இடம்பெறவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் சிதம்பரத்திற்கு இன்றும் ஜாமின் கிடைக்காது என்றே கூறப்படுகிறது.


அமலாக்க துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் வெளிநாடுகளில் வாங்கிய சொத்துக்கள் பட்டியலை தாக்கல் செய்தது. அவருக்கு சொத்து உள்ள நாடுகள் விவரம் வருமாறு: அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, பிரான்ஸ், கிரீஸ், மலேசியா, மோனாக்கா, சிங்கப்பூர், தென்ஆப்ரிக்கா, ஸ்பெயின், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் சொத்து உள்ளது.


Similar News