2011 ஆம் ஆண்டு தான் திறந்துவைத்த அதே சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம் !
2011 ஆம் ஆண்டு தான் திறந்துவைத்த அதே சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம் !
முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. உடனே அவர் தலைமறைவாகி விட்டார்.
முன்ஜாமீன் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை, அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. இந்நிலையில், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “எங்களது கருத்தை கேட்காமல் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது” என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் ப.சிதமப்பரத்தை அவரது இல்லத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர் சி.பி.ஐ தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த சி.பி.ஐ தலைமை அலுவலகத்தை திறந்து 2011 ஆம் ஆண்டு திறந்து வைத்ததே ப.சிதம்பரம் தான். வாழ்க்கை ஒரு வட்டம் என்று நெட்டிஸன்கள் பதிவிடுகின்றனர்.