ப.சிதம்பரம் தலைமறைவு: நெட்டிசன்களின் வறுத்தெடுப்பை தொடர்ந்து வாய் திறந்த ஸ்டாலின்!!
ப.சிதம்பரம் தலைமறைவு: நெட்டிசன்களின் வறுத்தெடுப்பை தொடர்ந்து வாய் திறந்த ஸ்டாலின்!!
மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா, தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐயும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சிதம்பரம், எங்கு உள்ளார் என தகவல் இல்லை. அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தலைமறைவாக உள்ளார்.
ஆனால், ஊழல் மற்றும் முறைகேடு செய்வதாக, தமிழக அரசை அடிக்கடி விமர்சித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் , சிதம்பரம் விவகாரத்தில் இதுவரை வாய் திறக்கவில்லை. அறிக்கையோ அல்லது டுவிட்டர் பதிவோ எதுவம் வெளியிடவில்லை.
ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மேல்சபை எம்பியாக தேர்வு செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
ஸ்டாலின் மவுனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அரசியல் நோக்கர்கள், அவர், ஊழலுக்கு துணை போகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளனர்
இதுதொடர்பான செய்தி தினமலர் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது.
நெட்டிசன்கள் இன்று காலை முதலே ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்டபடி கருத்து பதிவிட்டு வந்தனர்.
“ஊழல் பேர்வழி ஊழலுக்கு துணை போகாமல் வேறு எதுக்கு துணை போவார்.இவர் தேர்தலுக்குதான் கூட்டணி வைத்தார்.சிதம்பரம் விவகாரத்தில் இவர் எதுக்கு வாய் திறப்பார்.இவர்கள் எல்லோருமே விவரமானவர்கள்.அரசியல் தெரிந்தவர்கள்” என்று விசாகப்பட்டினத்தில் இருந்து ஜார்ஜ் அல்போன்ஸ் என்பவர் கருத்து பதிவிட்டு இருந்தார்.