“உள்ளூரிலேயே முதலமைச்சர் ஒன்றும் கிழிக்கவில்லை, வெளிநாட்டில் என்ன செய்யப்போகிறார்?” - கனிமொழியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்!!

“உள்ளூரிலேயே முதலமைச்சர் ஒன்றும் கிழிக்கவில்லை, வெளிநாட்டில் என்ன செய்யப்போகிறார்?” - கனிமொழியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்!!

Update: 2019-08-30 12:59 GMT


முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்திற்கு அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும், அரசுதுறை செயலாளர்களும் சென்றுள்ளனர்.


லண்டனில் முதல்வர் முன்னிலையில் நேற்று, இரண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகின.


மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர் பணி தரத்தை மேம்படுத்த சர்வதேச மனித மேம்பாட்டுத் துறையுடன் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளன. 





இன்று (ஆகஸ்ட்-30) பிரிட்டன் எம்.பி.களை சந்தித்தார். வழக்கமாக வேஷ்டி, சட்டை அணியும் படப்பாடி பழனிச்சாமி, கோட் சூட் அணிந்து காணப்பட்டார். எம்.பி.க்களுடன் சுகாதார திட்டம் குறித்து கலந்துரையாடிய முதல்வர், நகர உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி துறைகளில் அதிகளவு முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். 


பின்னர், லண்டனில் உள்ள பிரபல கிங்ஸ் மருத்துவனையை நேரில் பார்வையிட்டு, ஆம்புலன்ஸ் சேவையை கேட்டறிந்தார். 


அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளதாகவும், 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு திட்டம் உள்ளதாகவும் லண்டன் எம்.பிக்களிடம் பெருமிதமாக கூறினார்.





இதற்கிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்  வெளிநாட்டு பயணம் குறித்து திமுக மகளிரணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி அநாகரீகமாக விமர்சித்துள்ளார்.


அவர், “உள்ளூரிலேயே முதலமைச்சர் ஒன்றும் கிழிக்கவில்லை, வெளிநாட்டில் என்ன செய்யப் போகிறார்?” என்று கூறியுள்ளார். 




https://twitter.com/Kalaignarnews/status/1166670482445176833




இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர்கள் கனிமொழியை வாய்க்கு வந்த வார்த்தைகளில் எல்லாம் அர்ச்சனை செய்கின்றனர்.





முதல்வர், கனிமொழிக்கு சேர்த்துதான், முதல்வருக்கான மரியாதையை அவர் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அநாகரீகமாக பேசுவது கூடாது என்று மிக நாகரீகமாகவும், அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளிலும் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.




Similar News