உய்குர் முஸ்லிம்களை கொடுமைப்படுத்துவதாக சீனா மீது குற்றச்சாட்டு : உலக வங்கி நிதி உதவி நிறுத்தம்.!
உய்குர் முஸ்லிம்களை கொடுமைப்படுத்துவதாக சீனா மீது குற்றச்சாட்டு : உலக வங்கி நிதி உதவி நிறுத்தம்.!
சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உய்குர் இன முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். மிகவும் பழமையான, கல்வி அறிவு அதிகம் பெறாத இந்த வகை முஸ்லிம்கள் இன்னும் முன்னேற்றம் பெறாதவர்களாக உள்ளனர். இந்த வகை முஸ்லிம் இன மக்களால் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறி சீன அரசு இவர்களிடம் மிக கடுமையாக நடந்து கொள்கிறது என்றும், மனிதாபிமானமற்ற முறையில் அவர்கள் மீது அடிக்கடி அடக்கு முறைகள் மேற்கொள்வதாகவும் சீன அரசின் மீது பல உலக நாடுகள் குறிப்பாக மேலை நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் உய்கூர் முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்காக உலக வங்கி “தொழிற்கல்வி மேம்பாடு திட்டம்” என்ற பெயரில் ஆண்டுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை சீனாவுக்கு கடனாக வழங்கி வருகிறது. சமீபத்தில் சென்ற ஆகஸ்ட் 23 அன்று, சீனாவில் மனித உரிமை பிரச்சினைகளை கண்காணிக்கும் யு.எஸ். அரசு ஆணையம் உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது.
அதில் உய்கூர் முஸ்லிம்கள் மீதான மனிதாபிமானம் இல்லாத அடக்குமுறைகளை தொடர்ந்து சீனா மேற்கொள்வதாகவும், இஸ்லாத்தை மன ரீதியான பிரச்சினையாக கருதி சீனா கையாள்வதாகவும், உய்கூர் முஸ்லிம்களின் கல்வி செலவுகளுக்காக உலக வங்கி வழங்கும் நிதி உதவியை சீனா போலீசாருக்கான கண்ணீர் புகை ஏவுகணைகள், பாதுகாப்பு கவசங்கள், உபகரணங்களை வாங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடமாக, சீனா தனது மேற்கு-மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உய்குர் முஸ்லிம்களை எவ்வாறு தவறாக நடத்துகிறது என்பது குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உலக வங்கி சீனாவுக்கான கல்வி தொடர்பான நிதி உதவியை நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.