பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு ஏசு கிறிஸ்து படம் விநியோகம்! புதுக்கோட்டை மதமாற்ற வீடியோ வைரல் ஆனது!
பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு ஏசு கிறிஸ்து படம் விநியோகம்! புதுக்கோட்டை மதமாற்ற வீடியோ வைரல் ஆனது!
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், புல்வயல் கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்து குழந்தைகள்தான் அதிகமாக படிக்கின்றனர்.
இந்த பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியைகள், இங்கு படிக்கும் குழந்தைகளிடம் ஏசு கிறிஸ்துதான் உண்மையான கடவுள், அவரைத்தான் கும்பிட வேண்டும். இந்து சாமிகள் சாத்தான்கள் என்று பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைத்து வந்துள்ளார். இது நீண்ட நாட்களாக நடந்து வந்துள்ளது.
இந்த நிலையில், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து இந்து குழந்தைகளுக்கும் ஏசுகிறிஸ்து படத்தை கொடுத்து, அதனை வீட்டில் வைத்து கும்பிட வேண்டும் என்று அந்த குழந்தைகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர். அந்த குழந்தைகளும் வரிசையில் நின்று ஏசுகிறிஸ்து படங்களை வாங்கியுள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த நாமம்.ராஜா என்ற பொது சேவகர், இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளார். உடனே அவர்களின் இந்த செயலை கண்டித்ததோடு, அதனை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.
இது பற்றி கல்வி அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் பிஞ்சு குழந்தைகளை மதம் மாற்றம் செய்த இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கல்வி நிறுவனங்களில் மாணவ – மாணவிகளை மதம் மாற்றம் செய்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. இத்தகைய ஆசிரியர்கள், ஊழியர்களை அரசு தயவு தாட்சண்யம் இல்லாமல் பணி நீக்கம் செய்வது ஒன்றுதான் இதற்கு நிரந்தர தீர்வு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.