இந்தியா ராணுவ வீரர்களின் வீர மரணத்துக்கு சீனாவை பழிவாங்க எல்லைக்கு புறப்பட்ட சிறுவர்கள்.!

இந்தியா ராணுவ வீரர்களின் வீர மரணத்துக்கு சீனாவை பழிவாங்க எல்லைக்கு புறப்பட்ட சிறுவர்கள்.!

Update: 2020-06-22 05:28 GMT

கடந்த திங்கட்கிழமை இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததில் சீனா தரப்பில் 43 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடந்த அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாததால் எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தபட்டு உள்ளது. லடாக் எல்லையில் சீனா ராணுவத்தின் மீது இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பை நடத்தி வருகிறது.

தற்போது இந்தியாவில் பல இடங்களில் சீனாவை கண்டித்தும் மற்றும் சீனா தயாரிப்புகளை வாங்க வேண்டாம் புறக்கணிக்க வேண்டும் என பல போராட்டங்கள் நடந்து வருகிறது வருகின்றனர்.

இதனியிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 சிறுவர்கள் இந்திய ராணுவ வீரர்களின் வீரமரணத்துக்கு சீனாவை பழிவாங்க புறப்பட்ட போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 சிறுவர்கள் சாலையில் கும்பலாக வருவதை கண்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த சமயத்தில் சிறுவர்கள் இந்திய ராணுவ வீரர்களின் வீர மரணத்திற்கு பழிவாங்கும் வகையில் சீனாவுக்கு சரியான பாடத்தை கற்பிக்க போவதாக தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் காவல்துறையினர் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி உள்ளனர்.   

Similar News