தேச பற்றுடன் இருந்த ஜெயலலிதா சாவித்ரி போன்ற மாபெரும் நடிகைகள் எங்கே, சொந்த நாட்டையே கொச்சை படுத்தும் விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் எங்கே!
தேச பற்றுடன் இருந்த ஜெயலலிதா சாவித்ரி போன்ற மாபெரும் நடிகைகள் எங்கே, சொந்த நாட்டையே கொச்சை படுத்தும் விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் எங்கே!
ஏப்ரல் 1965 முதல் செப்டம்பர் 1965 வரை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் மூண்டது. இந்த போர் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீரை மையம் கொண்டு மூண்டது, இரண்டாவது காஷ்மீர் போர் என அழைக்கப்படுகிறது. முதலாவது காஷ்மீர் போர் 1947 இல் இடம்பெற்றது.
ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் ஜிப்ரால்ட்டர் நடவடிக்கை என்ற பெயரில் கிட்டத்தட்ட 600 பாகிஸ்தானியப் படைகள் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவினர். இந்நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை அறிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையில் இரண்டாவது போர் தொடங்கியது. மொத்தம் ஐந்து வாரங்கள் நடந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். ஐக்கிய நாடுகளின் அமைதி முயற்சிகளை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டு அதன் பின்னர் சோவியத் ஒன்றியத்தில் தாஷ்கெண்ட் நகரில் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் உருவானது.
இந்த போர் நடைபெறும் பொழுது நாடெங்கிலும் இருக்கும் மக்கள் உதவ முன்வந்தனர். தமிழகத்தில் அம்மையார் ஜெயலலிதா அவர்களும், நடிகையர் திலகம் சாவித்ரி அவர்களும் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களை சந்தித்து தங்களுடைய நகைகளை நன்கொடையாக அளித்து தங்களுடைய தேச பற்றை வெளிப்படுத்தினர். மொத்தம் 80 சவரன் நகைகளை போர் நிதிக்கு அளித்தனர். தாங்கள் அணிந்திருந்த நகைகளையம் கொடுத்தனர். பல நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், தொழில் அதிபர்கள் போர் நிதிக்கு நன்கொடை அளித்தனர்.
இந்தியாவுக்கும் அண்டைநாடுகளுக்கும் இடையில் போர் மற்றும் பதற்றமான சூழ்நிலை உருவாகவும் போது, மக்கள் அனைவரும் முன் வந்து தங்களால் முடிந்த அளவு கொடை அளிப்பது வழக்கம். ஏன் கார்கில் போர் நடந்த போது, நம்மில் பலர் சிறாராக இருக்கும் போது போர் நிதியை சேகரித்து கொடை அளித்திருப்போம். தேச பக்தி என்பது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆழமாக ஊன்றியுள்ளது என்பது தான் உண்மை.