பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க எம்.பி! கொதித்தெழுந்தனர் இந்தியர்கள்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்!!
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க எம்.பி! கொதித்தெழுந்தனர் இந்தியர்கள்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்!!
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு இருந்த சிறப்புச் சலுகைகளைமத்திய அரசு ரத்து செய்தது. மாநிலத்தை இரு பிரிவாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன்பிரதேசமாகவும், லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.
இதற்கான மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுடானான நல்லெண்ண நடவடிக்கைகளை துண்டித்து வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் பல்வேறு நாடுகளிடமும் பாகிஸ்தான் ஆதரவு கோரி வருகிறது. எனினும் ஐ.நா. சபை, அமெரிக்கா,ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளித்தன.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்தஎம்.பி., டாம் சியோஸி அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில், “காஷ்மீர் விஷயத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மோசமான விளைவுகள ஏற்படுத்தும்.பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறி அப்பாவி மக்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்துள்ளது. அங்குதொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. எனவே, இந்தியாவின் நடவடிக்கையை அமெரிக்கா கண்டிக்கவேண்டும்’’ என கூறி இருந்தார்.