ஈ.வெ.ரா-வின் பெயரில் திருக்குறளை திரித்து ஹிந்து மத வெறுப்பை விதைத்த பெரியாரிஸ்டுகள் - ஆதாரத்துடன் தக்க பதிலடி கொடுத்த பூஜ்ய ஸ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகள்

பெரியாரிஸ்டுகளின் திருக்குறள் மாநாட்டிற்கு பூஜ்ய ஸ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகளின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 12 சென்னையில் பெரியாரிஸ்ட்டுகள் திருக்குறள் மாநாடு நடத்தி உள்ளார்கள். இந்த மாநாட்டிற்கான முன்னோட்டமாக பல வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். இவற்றில் திருக்குறளுக்கு தவறாக பொருள் உரைத்து, ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தி உள்நோக்கத்துடன் பிரச்சாரம் செய்தனர்.
இந்த மோசடியை ஆதாரத்துடன் வெளிபடுத்தியுள்ளார் பூஜ்ய ஸ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகள். பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகளின் உரையில் நாம் கற்க வேண்டிய பல செய்திகள் பொதிந்துள்ளது. திருக்குறளையும், தமிழையும் இழிவுபடுத்திய ஈவேராவின் பெயரில் திருக்குறள் மாநாடு நடத்திய போலி பகுத்தறிவாளார்களுக்கு தன் கண்டனத்தை வெளிபடுத்தியுள்ளார் பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகள்.
ஸ்வாமிகளின் கருத்துரையை அடுத்து விரிவாக காணலாம்:
https://youtu.be/wYUySMu5p1Q
மே 17 இயக்கத்தினர் திருக்குறள் உடைய உண்மையான கருத்து என்ன என்று ஆய்வு செய்து, பல அறிஞர்கள் புத்தகங்கள் எழுதி இருப்பதாக வந்த புத்தகங்களை வெளிட்டதகவும் கூறியிருக்கின்றனர். அதிலே அவர்கள் பேசக்கூடிய கருத்துக்கள் எல்லாம் அவர்கள் எவ்வளவு தூரம் திருக்குறளை கற்று இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறலை அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள். இது ரொம்ப நாளா நடந்துகொண்டிருக்கிறது தமிழ்நாட்டில். அதாவது நம்ம எல்லா மனிதர்களையும் மதிக்கணும் அதுல ஒன்னும் சந்தேகம் கிடையாது.
சமூகத்தில் ஏற்றத் தாழ்வு என்பது இயல்பாக இருக்கிறது. மக்கள் ஏற்றத்தாழ்வு உணர்வை உடையவர்களாக இருந்தாலும் பல வகையான பிரிவுகள் இருந்தாலும், ஒற்றுமையை சொல்லக்கூடிய கருத்துக்களை கல்விச் சாலைகளில் சரியாக போதிக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட இனத்தை எப்பொழுது பார்த்தாலும் தாக்கிக் கொண்டு இருப்பது சரியாக தோன்றவில்லை.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வரியை மாத்திரம் சொல்கிறார்களே தவிர அடுத்த வரியை சொல்வதே கிடையாது. அது எந்த பகுதியிலே வருகிறது பெருமை என்கிற பகுதியிலே வருகிறது. அது பொருட்பாலில் இருக்கிறது. பெருமை என்ற அதிகாரத்திலே இருக்கிறது. அதனுடைய இரண்டாவது வரி இவ்வாறு சொல்லுகிறது. அதாவது ‘சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ அந்த இரண்டாவது வரியை எல்லோரும் தவிர்த்து விடுகிறார்கள்.