நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'பட்டாஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.
'அசுரன்' திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.