பொள்ளாச்சி பாணியில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த தி.மு.க இளைஞரணி சபரி அபிஷேக் - சேலத்தை அதிர வைக்கும் சம்பவம்!

பொள்ளாச்சி பாணியில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த தி.மு.க இளைஞரணி சபரி அபிஷேக் - சேலத்தை அதிர வைக்கும் சம்பவம்!

Update: 2019-09-25 11:09 GMT

சேலத்தில் ஆசை வார்த்தை கூறி பல பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய திமுக இளைஞரணியை சேர்ந்த சபரி அபிஷேக் கைது செய்யப்பட்டுள்ளார்.




https://twitter.com/veerathiru1857/status/1176495602353328128?s=20


சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரி அபிஷேக். பட்டதாரி இளைஞரான இவர், திமுக இளைஞரணியில் தன்னை இணைத்துக்கொண்டு வலம் வந்துள்ளார். பல கல்லூரி பெண்களை காதலிப்பது போல் ஏமாற்றி அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டிருக்கிறார். அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.




https://twitter.com/senthilcheliyan/status/1176848306728603654?s=20


புது காதலி கிடைத்தவுடன் பழைய காதலியை கழட்டி விடுவதும், பின்னர் அவருடன் எடுத்த அந்தரங்க படங்களை காட்டி, மிரட்டி பணம் பறித்து, அந்த பணத்தை வைத்துக்கொண்டு புது காதலியுடன் உல்லாசமாக சுற்றி வந்ததும் தெரிய வந்திருக்கிறது. இப்படி மோசடியான முறையில் பல பெண்களை ஏமாற்றியுள்ளார் திமுக இளைஞரணியை சேர்ந்த சபரி அபிஷேக்.




https://twitter.com/sansbarrier/status/1176724563922542592?s=20


சமீபத்தில் இவரிடம் சிக்கிய இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற பெண்ணின் அண்ணன், கையும் களவுமாக பிடித்ததினால் இந்த சம்பவம் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது. பொள்ளாச்சி விவகாரத்தில் கனிமொழியை பொள்ளாச்சிக்கு அனுப்பி போராட்டம் நடத்திய திமுக, தன் கட்சிக்குள்ளேயே இருக்கும் காமகொடூரர்களை கண்டுகொள்ளுமா.? இன்னும் எத்தனை நாளுக்கு வேஷம் போடும் என்று பொதுமக்கள் கேள்விஎழுப்பி வருகின்றனர்.


Similar News