கேரளாவில் முத்தூட் நிறுவன பெண் பணியாளரை தரதரவென இழுத்து சென்று தி.மு.க கூட்டாளி கம்யூனிஸ்டுகள் அரங்கேற்றிய அட்டூழியம் - பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி.!

கேரளாவில் முத்தூட் நிறுவன பெண் பணியாளரை தரதரவென இழுத்து சென்று தி.மு.க கூட்டாளி கம்யூனிஸ்டுகள் அரங்கேற்றிய அட்டூழியம் - பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி.!

Update: 2019-09-06 09:49 GMT

கேரள மாநிலத்தில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்கள், கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறிது நாள் போராட்டத்திற்கு பிறகு முத்தூட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப முன்வந்த போதும், கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்களை  பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.


சமீபத்தில் நிறுவனத்தை திறக்க முயலும் பெண்ணுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கொலை மிரட்டல் விடுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிய பெண்ணை, அலுவலகத்திற்குள் நுழைந்து தரதரவென வெளியே இழுத்து வந்து தள்ளிவிட்டு, கதவை பூட்டியுள்ளனர் கம்யூனிஸ்ட் கட்சியினர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு முத்தூட் நிறுவன ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்யமுடியாமல் தவித்து வரும் நிலையில், பெண்களுக்கான கட்சி என்று தங்களை அடையாளப்படுத்திகொண்டு, சபரிமலை விவகாரத்தில் அரசியல் செய்த கம்யூனிஸ்ட் கட்சி, முத்தூட் பைனான்ஸ் விவகாரத்தில் பணிக்கு வந்த பெண்ணிடம் நடந்து கொண்ட விதம், அதன் முகத்திரையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்தியா முழுவதும் 3 ஆயிரத்து 600 கிளைகளை கொண்டுள்ள இந்த நிறுவனம் கேரளாவில் மட்டும் 600 கிளைகள் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.




https://twitter.com/jaypanicker/status/1169890332521091072



Similar News