ஒரு சந்ததியையே அழிக்க திட்டமா? விபரீத நிலையை எட்டிய மதமாற்றம்!

ஒரு சந்ததியையே அழிக்க திட்டமா? விபரீத நிலையை எட்டிய மதமாற்றம்!

Update: 2019-10-11 10:41 GMT

சமீப ஆயுத பூஜை பதிவுகளில் பல கிறிஸ்துவ நண்பர்கள் பொட்டு வைத்த இயேசு வின் படம் வைத்து இதே ஆயுத பூஜையை செய்ததை காட்டியிருந்தனர். இதை சிலர் மத நல்லிணக்கமாகவும் சிலர் காமெடியாகவும் கடந்து சென்றனர்.


எனக்கு இது புதிய எச்சரிக்கை மணியாகப்பட்டது.ஆயுத பூஜை முற்றிலும் இந்திய இந்து மத சம்பந்த பட்ட ஒரு நிகழ்ச்சி. இது இத்தாலியில் ரோமில் கடைபிடிப்பது கிடையாது. உலகில் இரண்டு மதங்கள் மத மாற்றத்தை ஊக்குவித்தே வளர்கின்றன. ஒன்று இஸ்லாம்.
மற்றொன்று கிறிஸ்துவம். இஸ்லாம் தனித்தன்மையை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கிறது. பெயர், உடை, பழக்க வழக்கங்கள் எல்லா வற்றிலும் அது தனித்து நிற்கவே விரும்புகிறது. அதற்காக அது கொடுமையான யுத்தங்களை செய்து பல கோடி மக்களை இழக்கவும் தயாராக இருக்கிறது. அப்படி செய்து வளர முடியும் என்று இன்றும் நம்புகிறது.
இதை எதிர்கொள்வது எளிது. ஏன் என்றால் இவன் வெளிப்படையாக வருகிறான். பிடித்தால் சேர்ந்து கொள். இல்லையேல் யுத்தத்தில் சிந்திப்போம் என்பது அவரது நிலை.


ஆனால் கிறிஸ்துவம் இருக்கிறதே. அது ஒரு நம் நீர் நிலைகளில் வளரும் ஆகாச தாமரை போன்றது. ஆகாச தாமரை எப்படி முதலில் நீரில் படர்ந்து அந்த நீரை குடித்தே வெகு வேகமாக வளர்ந்து அதே நீர் நிலையை ஒரு கட்டத்தில் முழுவதும் ஆக்கிரமித்து கடைசியில் அந்த நீர் நிலையை வற்ற வைக்குமோ அது போல் இந்த கிறிஸ்தவம் நம்மிடையே அழகாக வளர்ந்து நம் பெயர், பழக்கம் கலாசாரங்களை, விழாக்களை, ஆராதனைகளை கைக் கொண்டு முடிவில் இந்துக்கள் இருந்த இடமே இல்லாமல் செய்துவிடும் அபாயம் உண்டு. இதற்கு சான்று உண்டா என்றால் உண்டு.


ஒரு கேள்வி.? அலக்சாண்டர் என்பது கிறிஸ்துவ பேரா? ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் சீசர் கிளியோபாட்ரா என்பதெல்லாம் கிறிஸ்தவ் பெயர்களா? ஆம் என்றால் நீங்கள் சிந்திக்கவில்லை என்றே அர்த்தம். இவையெல்லாம் ரோம கிரேக்க பெயர்கள். கிறிஸ்து பிறந்து 2000 வருடம் தான் ஆகிறது என்றால் அதற்கு முன்பு வாழ்ந்தவர்கள் எப்படி கிறிஸ்துவ பெயர்களை பெற்றிருக்க முடியும்.? கிறிஸ்து வுக்கு பிறகு 380 ஆண்டுகளுக்கு பிறகே மன்னர் தியோடோசியசால் ரோமில் கிறிஸ்துவம் ஒரு மதமாக அங்கிகரிக்கப் படுகிறது. அதற்கு பிறகு ரோமில் போப் பின் சக்தி வலுத்து ரோம நகரத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான ரோம மாற்று மத பெரும் ஆலயங்கள் அழிக்கப் பட்டு அந்த இடங்களில் கிறிஸ்துவ ஆலயங்கள் நிறுவப் படுகின்றன. பழைய ஆலயங்களில் இருக்கும் பளிங்குகளை கொண்டே இன்று ரோமின் மிகப் பெரிய ஆளையமான செயின் பீட்டர் பசிலிக்கா கட்டப்படுகிறது. இதை நான் சொல்லவில்லை. ரோம் நகர சரித்திரம் சொல்கிறது.


இப்போதும் கிறிஸ்துவுக்கு முன் ரோமர்களின் கிரக்கர்களின் மதத்தின் பெயர் என்ன என்று யாருக்காவது தெரியுமா ? அவர்களும் மார்ஸ்.வீனஸ் என்று கிரகங்களையும் காதலுக்கு ஒரு கடவுள் (நமக்கு மன்மதன்) நெருப்புக்கு ஒரு கடவுள், நீருக்கு ஒரு கடவுள், ஆகாசத்துக்கு ஒரு கடவுள் என்று இயற்கையைத்தான் தொழுது வந்திருக்கின்றனர். பின்னர் ஒரு காலகட்டத்தில் சடங்குகளில் முழுகி மூலத்தை தொலைத்திருக்கலாம். அதன் முடிவு இன்று அந்த மதத்தின் பெயர்கூட தெரியாமல் முற்றிலும் அழித்து இந்த கிறிஸ்தவும் அதை தனதாக்கி கொண்டது. பின் மெல்ல கிறிஸ்துவுக்கு முன்னாள் என்று மோசஸ் அபிரஹாம் என்று கதையை விட்டு தாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதமாக காட்டிக் கொள்ள துவங்கி விட்டது. கேட்டால் முன்பு இருந்தவரும் கிறிஸ்துவர் தாம். என்று முழங்கலாயிற்று.
ரோம கிரேக்க சரித்திரங்களை விழுங்க கிறிஸ்துவத்துக்கு சுமார் 1000 ஆண்டுகள் படித்தன எனலாம். இதைப் போலத்தான் இந்த கிறிஸ்துவம் ஒவ்வொரு கண்டத்திலும் நாட்டிலும் பரவுகிறது.


இப்போது நம் நிலைக்கு வருவோம். ரவிச்சந்திரன், கமலா, வசந்தா, தனசேகரன், ராஜ சேகரன், பிரியா, ஆனந்தி மல்லிகா, இது போன்ற பெயர்களெல்லாம் இந்து பெயர்கள் என்றுதானே நினைக்கிறீர்கள். இல்லை. இவைகளை கிறிஸ்துவ மதம் களவாண்டு பலகாலம் ஆகி போச்சு. அதே போல் மெல்ல மெல்ல நம் கோவில் பாணியிலேயே சர்ச்குகள் கட்டி கொடியேற்றி, தேர் இழுத்து ஊர்வலம் போய் நம் பழக்க வழக்கங்களை சடங்குகளை தமதாக்கிக் கொண்டு ஏறி வருகிறது. இது ஒரு கலாசார யுத்தம்.


இதன் இன்னொரு முகம் கிறிஸ்துவத்தை பரப்பி சரித்திரத்தை திருத்துதல். இதை 500 வருடங்களுக்கு முன்பு வந்த ஜெர்மானிய, போர்த்துகீசிய கிறிஸ்துவர்கள் தொடங்கினாலும் பெரிதாக முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால் 150 வருடங்கள் முன்பு வந்த ராபர்ட் கார்டுவெல் என்கிற பாதிரி ஆதாரமேயில்லாமல் திராவிடம் ஆரியம் என்று பிரித்து சரியாக விஷத்தை வேரில் வைத்தான். இஸ்லாமிய படையெடுப்புகளால் சிதைந்து எழுதப்பட்ட சரித்திரம் இல்லாமல் வெறும் சடங்குகளில் மூழ்கிக் கிடந்த சமுதாயத்தை வெகு எளிதில் கவர்ந்தான். முதலில் உங்களை உய்விக்க வந்திருக்கிறோம் என்ற இந்த கிறிஸ்துவ் பாதிரிமார்கள் பின் ஒரு மலையில் (பரங்கி மலை) நடந்ததாக நம்பப் படும் கொலையை தமக்கு சாதகமாக கொண்டு இறந்தவரே செயின்ட் தாமஸ் அவரது கோயிலே சாந்தோமில் இருக்கும் தேவாலயம் என்று கிளம்பினர்.


பின் மெல்ல வெவ்வேறு கதைகள் மூலம் வள்ளுவரே கிறிஸ்துவர். திருமூலர் கிறிஸ்துவர் என்று மாற்றி இப்போது இயேசுவே ஆத்மா ரூபத்தில் கன்னியாகுமரியில் வந்து சென்றார் என்று முடிப்பார்கள். அடுத்து கிறிஸ்துவத்தில் இருந்தே சைவமும் வைணவமும் வந்தது என்று தொடங்கும் காலமும் வந்துவிட்டது. அதற்கான ஆய்வு புத்தக தயாரிப்புகளும், போலி டாக்டரேட் கோமாளிகளும் கிளம்பி விட்டனர்.


இவர்களை தடுத்து நிறுத்தியே தீர வேண்டும். இப்படி ஒட்டுண்ணியாக ஒட்டி வளர்ந்து இவர்கள் சனாதன தர்மைத்தை அழிக்க காலகெடு எதுவும் வைத்துக் கொள்வதில்லை. எனவே இவர்களால் நின்று நிதானமாக இன்னும் 500 ஆண்டுகளுக்கும் நம்மிடையே இருந்து நம்மை அழிக்க முடியும். உண்டு வளர்ந்து அந்த பயிரையே அழிக்குமோ அது போல் இன்று இந்த விஷ விருட்சங்கள் பல்கி பெருகி நிற்கின்றன.


எனவே இந்த கலாச்சார சீர்கேட்டை வளர்க்கும் மத மாற்றத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். இது மிகவும் அவசரமான அவசியமான நடவடிக்கையாகும் என்று கூறியுள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர்.


Similar News