புதுவித போதை வரிசையில் "கேன்சர்" மருந்து - சிறுவர்கள் போதைக்கு அடிமையாகும் விவகாரத்தில் நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் மீது நடவடிக்கை.!

புதுவித போதை வரிசையில் "கேன்சர்" மருந்து - சிறுவர்கள் போதைக்கு அடிமையாகும் விவகாரத்தில் நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் மீது நடவடிக்கை.!

Update: 2019-10-26 04:44 GMT

சிறுவர்கள் போதைக்கு அடிமையாவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேசிய குழந்தைகள் நல ஆணையம் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல்வேறு உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.


தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுவர் புதுவித முறையை பயன்படுத்தி போதை ஏற்றிக்கொள்வதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கேன்சர் நோய்க்கு போடப்படும் மருந்தை உடலில் செலுத்தி போதை உண்டாக்கியது தெரிய வந்துள்ளது. ஒருவித கேன்சர் மருந்தை, நீரில் கலந்து ஊசி மூலமாக உடலில் செலுத்தி, ஒரு நாள் முழுவதும் போதையில் இருக்கும் அளவுக்கு செய்துள்ளனர். இந்த கேன்சர் மருந்து தமிழகம், உட்பட பல மாநிலங்களில் மோசடியான முறையில் விற்பனையாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் இந்த மருந்தின் பயன்பாடு குறைவு தான். வெளிநாடுகளில் கூட சில ஆயிரம் அளவில் தான் இந்த வகை மருந்துகள் விற்பனையாகிறது. இருந்து போதிலும் தமிழக சிறுவர்களுக்கு இந்த மருந்து எப்படி கிடைத்தது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேற்கொண்டு நடந்த விசாரணையில் இந்த மாதிரியான மருந்துகள் திருப்பூரில் இருந்து மற்ற இடங்களுக்கு விநியோகிக்கப்படுவது தெரியவந்துள்ளது.


தேசிய குழந்தைகள் நல ஆணையத்துக்கு ஒரு மாவட்ட ஆட்சியரை சஸ்பென்ட் செய்யவோ, இடமாற்றம் செய்யவோ பரிந்துரை செய்யும் அளவுக்கு அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் நடவைக்கை எடுக்க தவறிய 30க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 57 உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Similar News