தி.மு.கவின் நூதன திருட்டு: எங்க மருமகன் நடவடிக்கைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைங்கோ!! கருணாநிதியின் மகள் செல்வி பகிரங்க அறிவிப்பு!

தி.மு.கவின் நூதன திருட்டு: எங்க மருமகன் நடவடிக்கைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைங்கோ!! கருணாநிதியின் மகள் செல்வி பகிரங்க அறிவிப்பு!

Update: 2019-10-22 13:29 GMT

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின்  மகள் செல்வியின் மருமகனும் கருணாநிதியின் பேத்தியின் கணவருமான ஜோதிமணி நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கருணாநிதி மகள் செல்வி தரப்பில் இருந்து நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ஜோதிமணி மீது, ஏற்கனவே போலி மருந்து தயாரித்த புகார் இருப்பதால், தற்போது அதைப் பற்றியும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஜோதிமணி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது நடவடிக்கைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கருணாநிதியின் மகள் செல்வி தரப்பில் இருந்து பகிரங்கமாக நாளிதழில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே மொத்த திமுகவும் பஞ்சமி நில மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள நிலையில், திமுக சம்பந்தப்பட்ட ஒவ்வொருவராக சிக்கி வருவது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






Similar News