நடிகை ஜெயலட்சுமி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார், அப்போது பேசிய நடிகை விஜயலட்சுமி மொழிப்பிரச்சனை, குடும்ப அரசியல் போன்ற பல பிரச்சனைகள் குறித்து திமுகவை கடுமையாக சாடினார்.
உங்கள் குடும்பத்தினர் மட்டும் ஹிந்தி படிக்கலாம் , ஹிந்தி பள்ளிக்கூடம் நடத்தலாம் ஆனால் மற்றவர்கள் படிக்கக் கூடாது இது என்ன நியாயம், பலமொழிகள் படித்து அறிந்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார், பிறகு குடும்ப அரசியல் பற்றிப் பேசிய நடிகை விஜயலட்சுமி தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் மட்டும் தான் வளர்கிறது, குடும்ப அரசியல் நீண்டநாள் நீடிக்காது என திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்தார்.
பாஜக போன்ற நல்ல கட்சியைத் தமிழ்நாட்டில் ஆதரிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள் அது கூடிய விரைவில் நடக்கும், திருவள்ளுவரைப் பற்றி பேசி ஸ்டாலின் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை, நான் ஒரு வீடியோ பார்த்தேன் அந்த வீடியோவில் 4 வரி ஒரு பேப்பரை பார்த்து பேச அவர் அவ்வளவு தவிக்கிறார். ஆனால் நம் மொழி தெரியாத நமது பிரதமர் தாய்லாந்தில் திருக்குறளை உலகறியச் செய்வதற்காக எவ்வளவோ பேசுகிறார், அவர் எங்கே நாலுவரி பேப்பரை பார்த்து பேசாத முடியாத ஸ்டாலின் எங்கே என கடுமையாக சாடினார்.