மகிழ்ச்சியாய் இருப்பதொன்றும் பெரிய மேஜிக் அல்ல. - ஒரு உளவியல் பார்வை
மகிழ்ச்சியாய் இருப்பதொன்றும் பெரிய மேஜிக் அல்ல. - ஒரு உளவியல் பார்வை
மகிழ்ச்சி என்பது எதிர்காலத்திற்க்கு ஒத்திபோடுகிற நிகழ்வு அல்ல. அது
நிகழ்காலத்தை வடிவமைக்கிற யுத்தி - ஜிம் ரான்
நீங்கள் ஒரு அதிகாலையில் கடலோரமாக நடைபயிற்சி மேற்கொண்டிருக்கிறீர்கள். அப்போது
உங்கள் எதிரே உங்களிடம் ஒரு தொகையை கடனாக வாங்கி வெகு நாட்களாகியும் திருப்பி தராத
ஒரு நண்பர் வருகிறார். உங்களை நெருங்கியதும் அழகாக புன்னகைத்து "காலை
வணக்கம்" வைத்து விட்டு உங்களை தாண்டி சென்று விடுகிறார்.
இந்த சூழலுக்கு உங்கள் வெளிப்பாடு என்னவாக இருக்கும்?
நீங்கள் நினைக்கலாம்...
"எனக்கு நியாபக மறதி
என்று நினைத்துவிட்டாரா? அல்லது ஒரு மரியாதைக்காகவாவது எவ்வளவு சீக்கிரம்
முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் தந்து விடுகிறேன் என கூறியிருக்கலாம்."
என பல சிந்தனைகள் உங்களை நிறைத்து அன்றைய உங்கள் தினத்தை கெடுக்க கூடும்.
அந்நாள் முழுவதும் நீங்கள் அவருக்கு கடன் கொடுத்த நாட்கள் அதை அவர் என்ன சொல்லி
வாங்கினார் என பல எண்ணங்களால் சூழப்பட்டிருக்கும்.
இது ஒரு உதாரணம் தான், இது போல் பல சுழல்களை
நாம் அன்றாடம் நாம் சந்திக்க நேரும். சிலவை எளிதாக கையாளக்கூடும், சிலவை நம்மை தொந்தரவு
செய்யும். சிலவை நம்மை வருத்தமடைய செய்யும். சிலவற்றை நம்மால் தாங்கவே முடியாது.
இப்பொழுது இது உங்கள் தருணம்... உங்களுக்கு நிகழும் அசாதாரணமான சூழலை
ஏற்றுக்கொண்டு வருந்த போகிறார்களா? அல்லது அதை
புறம்தள்ளி மகிழ்வை தேர்வு செய்கிறீர்களா?
1. நீங்கள் நடந்ததையே நினைத்து
கவலையில் ஊறி உழன்று கொண்டிருக்கலாம். அல்லது அதை பற்றி யோசிப்பதை
தவிர்த்து அடுத்து நடக்க வேண்டிய நிகழ்வுகளில் கவனம் செலுத்தி புன்னகையை அணிந்து
கொள்ளலாம்.
2. வருந்தத்தக்க செயல்கள், அல்லது ஆழமான
காயங்கள், அவமானம் கோபம் என பல உணர்வுகள் உங்கள் வழி வந்து
உங்களை நிலைகுலைய செய்ய முற்படலாம். ஆனால் எந்த உணர்வுகளையும் உங்கள் மீது
ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் தேர்வு.
3. உங்களால் எந்த மனிதர்களின் நடவடிக்கைகளையும்
கட்டுபடுத்த முடியாது. ஆனால் அதற்கான உங்கள் வெளிப்பாடை உங்களால் வடிவமைக்க
முடியும் உங்கள் உணர்வுகளை செழுமைப்படுத்த முடியும்.
மகிழ்ச்சி என்பது...
களிப்பின் உச்சம். நிறைவான மனநிலை, வருத்தங்களும்
துயர்களும் அற்ற நிலை. நாம் பெரும்பாலும் நம் திட்டங்கள் நிறைவேறும் பொழுது, நம் மரியாதையுடன்
அன்புடன் நடத்தப்படும் பொழுது, நாம் விரும்பியதை
செய்யும் பொழுது, நம் இலக்குகளை அடையும் பொழுது நமக்கு ஏற்படும்
உவப்பு.
மகிழ்ச்சி என்பது நேர்மறை நிகழ்வுகளின் விளைவு. ஆனால் உண்மையில் இது
நம்முள் நிகழ்வது. வெளிப்புற சூழல்கள் நம் மகிழ்ச்சிக்கு துணை நின்றாலும்
நிஜத்தில் அது நம்முள் நிகழும் மாற்றமே.. துவக்க காலங்களில் சூழல் எதுவாக
இருந்தாலும் மகிழ்ச்சியை மட்டுமே தேர்வு செய்ய சற்று கடினமாகவே இருக்கும். இதற்கு
நம்மிடமிருந்து போதுமான பங்களிப்பு தேவை சில சமயங்களில் சோர்ந்து போய் நாம் துன்பத்திலேயே
உழன்றுவிட முடிவு செய்யக்கூடும். ஆனால் காலம் கடக்க கடக்க மகிழ்வாக இருக்க கற்று
கொள்வோம்.
எந்த சூழலிலும் மகிழ்வை தேர்வு செய்ய சில டிப்ஸ் இங்கே...
1. எந்த சூழலையும் நேர்மறையான எண்ணத்தோடே அணுகுங்கள்
2. தீர்வுகளின் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள்
3. உங்கள் எண்ணங்களை தொடர்ந்து கவனியுங்கள்
4. சில வேடிக்கையான திரைப்படங்கள், நாடகங்களை ,புத்தகங்கள்
பாருங்கள், வாசியுங்கள்
5. உங்கள் சாதனைகளை ஒர் பார்வை பாருங்கள் அதிலிருந்து
உத்வேகம் பெறுங்கள்
6. தினசரி உங்களுக்கு நீங்களே ஓர் நன்மையை செய்து
கொள்ளுங்கள்
7. மகிழ்ச்சியான துணையுடன் நேரத்தை செலவிடுங்கள்
8. எதையும் மனதுக்கு மிக நெருக்கமாக எடுத்து
கொள்ளாதீர்கள்
9. மனதிற்க்கு தளர்வான இசையை கேட்டு லயித்திருங்கள்