துண்டுச்சீட்டு இருந்தும் மாப்பிள்ளையின் பெயருக்கு பதிலாக மாமனாரின் பெயரை உச்சரித்த ஸ்டாலின், திருமண விழாவில் அதிர்ச்சி.

துண்டுச்சீட்டு இருந்தும் மாப்பிள்ளையின் பெயருக்கு பதிலாக மாமனாரின் பெயரை உச்சரித்த ஸ்டாலின், திருமண விழாவில் அதிர்ச்சி.

Update: 2019-11-04 04:53 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை என்ற கிராமத்தில் திமுக பிரமுகர் திருமண இல்ல விழா நடைபெற்றது. காசி விஸ்வநாதன் - பொற்கொடி தம்பதியரின் மகன் சுப்பிரமணியனுக்கும், அடைக்கல காத்தான் - பூபதி ஆகியோரின் மகள் பிரதீபாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். விழா மேடையில் உரையாற்றிய ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தி பேசினார்.



அப்போது, பெண்ணின் மாமனாரை (காசி விஸ்வநாதன்) மணமகன் என அழைத்ததால், திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் அனைவரும் திடுக்கிட்டனர். சில நொடிகளில் தன் உளறல் பேச்சை உணர்ந்த அவர், அதை திருத்தி கொண்டு, சுப்பிரமணியன் என மணமகன் பெயரை கூறி சமாளித்தார்.


பேசி முடிப்பதற்குள் மூன்று இடங்களில் இதுபோல தடுமாறினார்,திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட திருமண விழாவில், மணமகளின் கணவராக மாமனாரின் பெயரை மாற்றி கூறி உளறியதால் அங்குள்ளவர்கள் முகம் சுளித்தனர்


Similar News