கடந்த தீபாவளி வெளிவந்த படங்கள் விஜய் நடிப்பில் பிகில் படம் மற்றும் கார்த்தி நடிப்பில் கைதி படம் என்பது அனைவருக்கும் தெரியும்.
கைதி படத்தின் விமர்சம் மற்றும் படத்தின் வசூல் அபாரமாக இருந்து வருகிறது. இந்த படம் 10 நாட்களில் ரூபாய் 73 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் விரைவில் ரூபாய் 100 கோடியைஅடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 34.2 கோடி வசூல் செய்துள்ளது. அதில் சென்னை வசூல் மட்டும் ரூபாய் 1.75 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கேரளாவில் 6.1 கோடி ரூபாய், கர்நாடகாவில் 6.5 கோடி ரூபாய், ஆந்திராவில் 11 கோடி ரூபாய், மற்றும் வட இந்தியாவில் 1.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள மற்றும் வெளிநாடுகளில் 13 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
படத்தின் பட்ஜெட் ரூபாய் 30 கோடி தயாரானது என கூறப்படுகிறது.