கந்த சஷ்டி வரலாறு போற்றும் முருக பக்தர்கள்!
கந்த சஷ்டி வரலாறு போற்றும் முருக பக்தர்கள்!
1. திருப்புகழ் மீட்டெடுத்த செங்கல்வராயா பிள்ளை!!
படுக்கையை விட்டு எழமுடியாத நிலையில் இருந்தார் அந்த வயதான மனிதர், தன் அறைக்கு உள்ளே வந்த அந்த நபரை பார்த்ததும் தடுமாறியவாரு எழுந்து, அவர் இல்லம் வந்தவரின் கரங்களை பிடித்து தன் கண்களில் ஒத்தி கொண்டு பின் சொன்னார்,
“ திருப்புகழை தேடி கண்டுபிடித்து அதை ஓலைச்சுவடிகளில்
இருந்து சரி பார்த்து எழுதி புத்தகமாக வெளியிட்ட கரங்களல்லவா இது “
இப்படி சொன்ன
அந்த வயதான மனிதர் உ.வே சுவாமிநாத ஐயர்! அந்த கரங்களுக்கு சொந்தக்காரர். திரு. வ. சு.
செங்கல்வராய பிள்ளை!!
செங்கல்வராய பிள்ளையையும், அவர் தந்தை சுப்ரமணிய
பிள்ளையையும், தங்களின் வேலை நேரம் போக மற்ற நேரத்தில் “திருப்புகழ் “ ஆராய்ச்சியிலும் அதன் மூல சுவடியை
கண்டுபிடிப்பதிலும் செலவழித்தனர். அவரது அயராத உழைப்பின் பயனாக இன்று “திருப்புகழ் “ நமக்கு கிடைத்திருக்கிறது. “ திருப்புகழின் “சந்தத்திலும், இசையிலும், சொல்லழகிலும்
தங்களை மறக்கும் பக்தர்கள் என்றுமே தணிகை மணி செங்கல்வராய பிள்ளைக்கும் அவர் தந்தை
சுப்ரமணிய பிள்ளைக்கும் கடமைப்பட்டிருக்கிறார்!!
2. பாம்பன்
சுவாமிகள்
79 வயது மனிதர் இவர். உடைந்த கால்களுடன் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அவர் கால்கள் இருந்த நிலையை பார்த்து
இவரால் இனி நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினர்.
அனால் அவரோ ஒரு முருக
பக்தர் தான் இயற்றிய ஷண்முக கவசத்தை திரும்ப திரும்ப பாட
ஆரமித்தார். உடைந்த கால்கள் மறந்து சுகமாக அங்கேயே எழுந்து நடக்க ஆரம்பித்தார். அவர்தான் பாம்பன் சுவாமிகள் . இன்னும் அந்த மருத்துவமனை
அறையில் அவர் புகைப்படம் உள்ளது.