கமலஹாசனை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

கமலஹாசனை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Update: 2019-11-12 09:01 GMT

நடிகர் கமலஹாசனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வறுத்தெடுத்துள்ளார். இதுதொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் எடப்பாடி பழனிச்சாமி, நிருபர்களிடம் கூறியதாவது:-


நடிகர்கள் திரைப்படங்களில் நடித்து பணம் சம்பாதிக்கும் வேலையை மட்டும் தான் செய்கிறார்கள். வேறு எந்த மக்கள் சேவையையும் செய்வதில்லை. வயதான பிறகு அவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.


உள்ளாட்சி அமைப்புகளில் என்னென்ன பொறுப்புகள் உள்ளன என்பதுகூட நடிகர்களுக்கு தெரியாது.


அரசியல் பற்றி நடிகர் கமலஹாசனுக்கு என்ன தெரியும்? சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட வில்லையே ஏன்?


அதேபோல கடந்த பாராளுமன்ற தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி எத்தனை ஓட்டுகளை வாங்கியது?


அவரது தொண்டர்களாவது அவரின் படத்தை பார்ப்பார்கள் என்றுதான் கமலஹாசன் இன்னமும் நடித்துக்கொண்டிருக்கிறார்.


இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Image Credits : Indiaglitz


Similar News