பூனைகளிடம் ஆன்மீக தன்மை உண்டு.. தெரியுமா உங்களுக்கு?

பூனைகளிடம் ஆன்மீக தன்மை உண்டு.. தெரியுமா உங்களுக்கு?

Update: 2019-11-17 04:33 GMT

உங்களை சுற்றி இருக்கும் பூனைகளை கவனித்திருக்கிறீர்களா, அவை அமைதியாக ஆழ்ந்து அமர்ந்திருக்கும். மேலும் ஏதோவொன்றை வெறித்து பார்த்தவாறு இருக்கும் அதன் கண்கள் . பூனைகளுக்கு இயல்பாகவே உள்ளுணர்வும் உள்ளாற்றலும் அதிகம் என சொல்லப்படுகிறது. அவை ஒருவரிடத்தில் நெருக்கமாக விளையாடினாலோ அல்லது அவர்களுடன் நெருக்கமாக இருந்தாலோ அவர்களிடத்தில் நல்ல அதிர்வுகள் இருக்கிறது என்று அர்த்தம். பூனைகள் ஒருவரிடத்தில் நெருங்க தயங்கினால்  அவர்கள் ஆற்றல் ரீதியில் சற்று பின்தங்கியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.


பூனைகள் மிகவும் மகத்துவம் வாய்ந்த ஒரு வளர்ப்பு பிராணி. அவைகளால் வீட்டில் இருக்க கூடிய எதிர்மறை ஆற்றலை கண்டறிய முடியும். அவர்களால் நல்லதிர்வுகளையும், தீய சக்திகளையும் எளிதில் அடையாளம் காண முடியும். எப்போதெல்லாம் அவை தீய அதிர்வுகளை உணர்கிறதோ அப்போதெல்லாம் அமைதியின்றி ஒருவித பதட்டத்துடன் இருப்பதை நம்மால் கவனிக்க முடியும். எப்போது அவை நல்லதிர்வுகளை உணர்கிறதோ அப்போதெல்லாம் அவை அமைதியாக இருப்பதை நம்மால் உணரமுடியும்.


மேலும் பூனைகளை வைத்திருப்பதால் அதன் உரிமையாளருக்கு இதய நோய்கள் வருவது 33% குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காரணம், பூனைகள் உள்ள வீட்டில் அதன் செய்கைகளால்  அழுத்தம் குறைவதாகவும் அதனால் இதய நோய்களை அதிகமாக அதன் உரிமையாளரை தாக்குவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மேலும் அதன் நிறங்களுக்கு சில குறிப்பிட்ட தன்மை உள்ளதாம். கருப்பு நிற பூனை எதிர்மறை ஆற்றலை நீக்குவதாகவும். சிவப்பு நிற பூனை வளம், கவனக்குவிப்பு ஆகியவற்றை குறிப்பதாகவும். நீலம்  அல்லது பழுப்பு நிற பூனை அன்பு, இன்பம் , உணர்வுரீதியில் நிலையானத்தன்மை ஆகியவற்றை குறிப்பதாகவும் அனைத்து நிறங்களின் கலவையாக இருக்கும் பூனைகள் ஞானம், ஆறுதல் மற்றும் பாதுகாப்பை குறிப்பதாகவும் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மேலும் ஒரு பூனையை வளர்ப்பதென்பது மிக எளிதானது. குறைவான இடம், குறைவான மற்றும் இயல்பிலேயே அது அமைதியான தன்மை கொண்டது. வீட்டிற்கு தேவையற்ற பூச்சி, உயிரினங்களை வேட்டையாடுவதில் திறன்படைத்தது. மேலும் தன்னை தானே சுத்தம் செய்து கொள்ளக்கூடிய குணம் அதற்க்கு உண்டு.


Similar News