“சாமிசிலைகள், வன்மம் பிடித்த சிலருக்கு அசிங்கமாக தெரிகிறது. அசிங்கம் பொம்மையில் இல்லை” –திருமாவளவனுக்கு நடிகைகஸ்தூரி சாட்டையடி பதில்!!

“சாமிசிலைகள், வன்மம் பிடித்த சிலருக்கு அசிங்கமாக தெரிகிறது. அசிங்கம் பொம்மையில் இல்லை” –திருமாவளவனுக்கு நடிகைகஸ்தூரி சாட்டையடி பதில்!!

Update: 2019-11-18 07:02 GMT

திருமாவளவன் புதுச்சேரியில் கலந்துகலந்துகொண்ட
ஒரு நிகழ்ச்சியில் இந்துக்கள் வழிபடும் சாமி சிலைகளை இழிவுபடுத்தி பேசினார். இதுதொடர்பாக
அவர் பேசும் போது,“ கூம்பாக
கட்டியிருந்தால், அது மசூதி. உயரமாக கட்டி இருந்தால், அது தேவாலயம். நிறைய அசிங்கமான
பொம்மைகள் இருந்தால் அது கோயில்” என்று கூறி இந்துக்களின் வழிபாட்டு முறையை கேவலப்படுத்தினார்.


இது இந்துக்கள் மத்தியில்
பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொதித்தெழுந்த இந்து அமைப்புகள், தமிழகம் முழுவதும் காவல்
நிலையங்களில் புகார் அளித்து வருகின்றன. பல்வேறு தரப்பில் இருந்தும் திருமாவளவனுக்கு
எதிர்ப்பு வலுத்து வருகிறது.


இந்த நிலையில் இது தொடர்பாக
தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, குறிப்பிட்டு இருப்பதாவது:-


குழந்தையின் கிறுக்கல்களை கூட பார்த்து, கண்விரித்து கைதட்டி கலையென்று மகிழ்வதுதான் மனித இயல்பு. பிடித்து வைத்த மஞ்சளிலும் பிள்ளையாரை பார்ப்பது நம்பிக்கை. கோவில் சிலையில் கலை
நயத்தை உணர நம்பிக்கை தேவையில்லை, கண்பார்வை இருந்தால் போதும். கம்யூனிஸ்ட்
நாத்திக சீன அதிபருக்கு கூட ரசிக்க தெரிந்தது, இங்கு வன்மம் புடிச்ச சிலருக்கு அசிங்கமாக தெரிகிறது. அசிங்கம் பொம்மையில் இல்லை.


சபரிமலைக்கு சென்றே தீருவேன் என்று அடம் பிடிக்கும் பெண்களை எடுத்துக்கொண்டால்...
தீவிர பக்தைகளா என்றால் அதுதான் இல்லை. தீவிர விவாதிகள், பகுத்தறிவு வாதிகள், பெண் உரிமை பெரும் போராளிகள். சபரிமலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை, பாவம் ஐயப்பன்தான் எந்த உரிமையும் கேட்டு போராடாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறார்!


புனித தலங்களை மதிக்க தெரியாத வக்கிரர்களுக்கு அங்கு நுழையும் உரிமை எதற்கு? சிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்படவேண்டும் - அது அவரின் பிறப்பினால அல்ல, அவரின் பிறவிக்குணத்தால்.


இவ்வாறு நடிகை கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.


Similar News