பா.ஜ.கவில் இணைந்த பிரபல சினிமா நடிகை.!
பா.ஜ.கவில் இணைந்த பிரபல சினிமா நடிகை.!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவிற்கும் தருணத்தில் தற்போது ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் அரசியல்வாதிகள் அதிகமாகவுள்ளனர் . அதேபோல் நடிகர்,நடிகைகள் அரசியல் கட்சியில் இணைத்து வருகிறார்கள்.
இந்த தருணத்தில் கமல்ஹாசனின் மக்கள் நிதி மையம் கட்சியை சேர்ந்த 3 பேர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். இந்த தருணத்தில் நேற்று விஜய் நடித்துள்ள 'வேட்டைக்காரன்' படத்தில் நடித்த நடிகை ஜெயலட்சுமி பாஜகவில் இணைந்தார்.
நடிகை ஜெயலட்சுமி நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இது குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கூறியது அவருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்களின் மீதான ஈர்ப்பு அவரை பா.ஜ.கவில் இணைய காரணம் என கூறினார்.
ஜெயலட்சுமி கேரளாவை சேர்த்தவர். அவர் வேட்டைக்காரன், மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம்23, நோட்டா உள்ளிட்ட படங்களின் சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.