ஐ.நா சபையில் ஒலித்த தமிழ் குரல் - உலக அரங்கில் இடம்பெற்ற ஒரே தமிழ் மாணவி : 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' மேற்கோள் காட்டி அபாரம்.!

ஐ.நா சபையில் ஒலித்த தமிழ் குரல் - உலக அரங்கில் இடம்பெற்ற ஒரே தமிழ் மாணவி : 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' மேற்கோள் காட்டி அபாரம்.!

Update: 2019-09-25 13:09 GMT

ஐ.நா சபையின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் தேதியை உலக அமைதி தினமாக கொண்டாட பரிந்துரை செய்யப்பட்டது.


இந்த வருடம் உலக அமைதி தினத்தன்று அமெரிக்காவில் நியூயார்க்கில் நடைபெற்ற பருவநிலை மாற்றத்துக்கான ஐ.நா மாநாட்டின் பொழுது தமிழ் பேசும் மாணவி ஜனனி சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.


உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவ தலைவர்கள் பட்டியலில் ஜனனி சிவக்குமார் இடம்பிடித்து அசத்தினார். அதோடு மட்டுமல்லாது பருவநிலை மாற்றத்துக்கான தனது உரையில், கணியன் பூங்குன்றனாரின்  'யாதும் ஊரே யாவரும் கேளீர்' வாசகத்தை மேற்கோள் காட்டினார்.


உலகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்டவர்களில், இந்திய வம்சாவழியை சேர்ந்த ஒரே மாணவ தலைவர் ஜனனி சிவக்குமார் தான் என்பது குறிப்பிடத்தக்கது. Girls Play Global என்ற அறக்கட்டளையின் மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.


மேலும் Girls Play Global என்ற முயற்சியின் மூலம் கால்பந்து விளையாட்டை ஊக்குவித்து வருகிறார். கோவை மாவட்டம் பேரூரில் கூட ஜனனி சிவக்குமாரின் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.




https://youtu.be/xF2MS5P_rx8

Similar News