கொடி கம்பம் விழுந்து காலை இழந்துள்ள பெண்ணுக்கு உதவுமாறு முதல்வருக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்

கொடி கம்பம் விழுந்து காலை இழந்துள்ள பெண்ணுக்கு உதவுமாறு முதல்வருக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்

Update: 2019-11-17 03:48 GMT

கோவையில் உள்ள சாலை ஒன்றில் அ.தி.மு.க-வின் கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததில், அவ்வழியே வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த ராஜேஷ்வரி நிலைத்தடுமாறி விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியது. அந்த விபத்தில் அவரது கால் முற்றிலுமாக சிதைந்தது. அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தை சார்ந்தவர். இப்போது இந்த விபத்தால் அறுவைச் சிகிச்சைக்கு உண்டான பணம் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள் இவரது குடும்பம். ஆகவே அந்தக் குடும்பத்தினர் பொதுமக்களிடம் நிதி உதவிக்கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனுராதா (எ) ராஜேஸ்வரியின் தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒரு மகளின் வாழ் நாள் துயரம் இது. இந்த பெண்ணிற்கு தமிழக அரசு உதவவேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


Similar News