கோவையில் கமாண்டோ படை குவிப்பு! தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு! சித்திக் ஜாகிர் உள்ளிட்ட மூவர் கைது !
கோவையில் கமாண்டோ படை குவிப்பு! தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு! சித்திக் ஜாகிர் உள்ளிட்ட மூவர் கைது !
கமாண்டோ படையினரும் காவல் துறையினரும் கோவை முழுவதும் குவிக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதை தீவிரமாக கருத்தில் கொண்டு போலீசார் வாகன சோதனையையும் தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேகத்துக் கிடமாக யாராவது சுற்றித்திரிந்தால் அதுபற்றி பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவையில் ஊடுருவியதாக கூறப்படும் 6 தீவிரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், மற்றவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
கேரளாவை சேர்ந்த அப்துல்காதர் என்பவன் தான் தீவிரவாதிகள் தமிழகத்தில் நுழைவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நடத்திய வேட்டையில் கேரளாவில் அப்துல் காதர் என்பவன் ஒரு பெண்ணுடன் பிடிபட்டான் .
கோவையிலும் திருச்சூரை சேர்ந்த சித்திக், கோவை உக்கடத்தை சேர்ந்த ஜாகீர் ஆகியோரும் பிடிபட்டனர். கேரளாவை சேர்ந்த அப்துல்காதரிடமும், அவருடன் சிக்கிய பெண்ணிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைப்பதற்காகவே பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததாக முதலில் தகவல் வெளியானது. இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்றதுபோன்று தமிழகத்திலும் குறிப்பாக கோவையில் கிறிஸ்தவ ஆலயங்களில் பயங்கரவாதிகள் பலத்த தாக்குதல் நடத்தலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.