ரூ.354 கோடி வங்கி மோசடியில் காங்கிரஸ் முதல்வர் மருமகன் கைது! காங்கிரசின் புதுப்புது ஊழல்கள் அம்பலம்!!
ரூ.354 கோடி வங்கி மோசடியில் காங்கிரஸ் முதல்வர் மருமகன் கைது! காங்கிரசின் புதுப்புது ஊழல்கள் அம்பலம்!!
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, வி.வி.ஐ.பிக்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்தது. இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் மத்திய பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத்தின் மருமகன் ரதுல் புரிக்கும் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி ரதுல் புரி தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதையடுத்து, ரதுல் புரிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத, 'வாரண்ட்' பிறப்பிக்கும்படி, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்க துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக டெல்லியில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு பங்களா உள்ளிட்ட ரத்துல் புரியின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அவரின் 40 மில்லியன் டாலர் அந்நிய முதலீடுகளையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் வங்கியில் ரூ.354 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் ரத்துல் பூரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசர் பேயர் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் சிபிஐ கடந்த வாரம் வழக்குப்பதிவு செய்திருந்தது. அந்த அடிப்படையில் ரத்துல் பூரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு வங்கிகளில் போலியான ஆவணங்கள் மூலம் ரூ.354 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.