காங்கிரஸ் நிர்வாகிகளின் ரூ150 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி!!

காங்கிரஸ் நிர்வாகிகளின் ரூ150 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி!!

Update: 2019-08-27 12:39 GMT


காங்கிரசின் மூத்த தலைவர் மறைந்த, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லால். இவரது மகன்கள் குல்தீப் பிஷ்னோய், சந்தர் மோகன். இருவரும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர்.


பிஷ்னோய் தற்போது காங்கிரஸ் சார்பில், ஆதம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆக உள்ளார். சந்தர் மோகன், அரியானாவின் முன்னாள முதல்வராக பதவி வகித்துள்ளார்.


இவர்களுக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள பினாமி சொத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.


குருகிராம் நகரில் உள்ள பிரிஸ்டல் ஓட்டலை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினர். இந்த ஓட்டல், பிரைட் ஸ்டார் ஓட்டல் நிறுவனம் பெயரில் இருந்தது. 


கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி, அரியானா, இமாச்சல் பிரதேசத்தில், பிஷ்னோய்க்கு சொந்தமான 13 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 


இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், “முடக்கி வைக்கப்பட்ட ஓட்டலின் 34 சதவீத பங்குகள் பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் உள்ள நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக, பிஷ்னோயிக்கு நெருக்கமானவர்கள் உள்ளனர்” என்றனர்.


Similar News