ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் மருமகன் கைதாகிறார்!!
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் மருமகன் கைதாகிறார்!!
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் மருமகனுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத 'வாரண்ட்' பிறப்பிக்கும்படி, அமலாக்க துறை டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, வி.வி.ஐ.பிக்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் மத்திய பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத்தின் மருமகன் ரதுல் புரிக்கும் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி ரதுல் புரி தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதையடுத்து, ரதுல் புரிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத, 'வாரண்ட்' பிறப்பிக்கும்படி, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்க துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து ரதுல் புரி, எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.