வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்? : திடுக்கிடும் பின்னணி

வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்? : திடுக்கிடும் பின்னணி

Update: 2020-04-19 09:56 GMT

மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு வைராலஜிஸ்ட்  லூக் மாண்டாக்னியர் கொரோனா குறித்து கூறும் போது,  உலகளாவிய தொற்றுநோய்க்கு வழிவகுத்த SARS-CoV-2 என்ற வைரஸ் "மனிதனால் உருவாக்கப்பட்டது" என்று கூறியுள்ளார். எய்ட்ஸ் நோய்க்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் ஆய்வின் முடிவு தான் கொரோனா வைரஸ் என்று கூறியுள்ளார். பிரெஞ்சு செய்தி சேனலில் பேட்டியளித்த இவர், எய்ட்ஸ் வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்து 2008 ஆம் ஆண்டு மருத்துவத்தில் நோபல் விருதைப் பெற்றார்.

கொரோனா வைரஸின் மரபணுவில் எச்.ஐ.வி மற்றும் மலேரியாவின் கிருமிகள் இருப்பது மிகவும் சந்தேகத்திற்குரியது என்றும் வைரஸின் பண்புகள் இயற்கையாகவே எழுந்திருக்க முடியாது என்றும் இவர் குற்றம்சாட்டியுள்ளார்.

2000 ஆம் ஆண்டில் இருந்து கொரோனா வைரஸ் குறித்து வுஹான் தேசிய பயோசேப்டி ஆய்வகம் ஆய்வு செய்து வருகிறது. அந்த ஆய்வகத்தில் தொழில்துறை விபத்து நடந்ததாகக் கூறப்படுவதாக மொன்டாக்னியர் குற்றம்சாட்டினார்.

மற்றுமொரு பிரெஞ்ச் வைராலஜிஸ்ட் எடியேனே சைமன் என்பவர் மொன்டாக்னியரின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார். 

அமேரிக்க ஊடகம் ஒன்று வெளியிட்ட புலனாய்வு அறிக்கையில், வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் பணிபுரிந்த ஒருவருக்கு தான் முதன் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது என்று கூறியுள்ளது. 

இயற்கையாகவே இந்த வைரஸ் வெளவால்கள் மத்தியில் தோன்றும் எனவும் இது ஒரு பயோவெப்பன் அல்ல என்றும் கூறும் அந்த அறிக்கை, வுஹான் நகரில் உள்ள பொது மக்களிடையே நோய்ப் பரவுவதற்கு முன்பு ஆய்வக ஊழியர் தற்செயலாக இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கூறுகின்றது.

அந்த செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, வைரஸின் தோற்ற இடமாக அடையாளம் காணப்பட்ட வுஹான் வெட் மார்க்கெட் ஒருபோதும் வெளவால்களை விற்கவில்லை என்றும், ஆய்வகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை மறைக்க வெட் மார்க்கெட் மீது சீனா பழி போட்டுள்ளது என்றும் குறிப்பிடுகிறது.

Similar News