பன்றிக் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் ரொம்ப கொடிய நோய் - உலக சுகாதார அமைப்பு

பன்றிக் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் ரொம்ப கொடிய நோய் - உலக சுகாதார அமைப்பு

Update: 2020-04-14 07:21 GMT

2009 ஆம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய பன்றிக் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் பத்து மடங்கு பயங்கரமான நோய் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சென்ற 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் முதலில் தோன்றிய பன்றிக் காய்ச்சல் மற்றும் எச் 1 என் 1 கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 18,500 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

ஆனால், லான்செட் மருத்துவம், ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை உலக சுகாதார அமைப்பு கணக்கிடவில்லை எனவும் ஆனால் அவற்றின் எண்ணிக்கை 1,51,700 முதல் 5,75,400 வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியது: தற்போது பரவி கொண்டிருக்கும் கொரோனாவை பற்றி நாம் அறிவோம். சென்ற 2009 ஆம் ஆண்டு பரவிய பன்றிக் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் 10 மடங்கு கொடிய நோய் மற்றும் ஆபத்தானது.

இந்த வைரஸ் மெதுவாக தான் குறைகிறது. சரியான சுகாதார நடவடிக்கைகள் இருந்தால் தான் இதனை கட்டுப்படுத்த முடியும். இதை முழுமையாக கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கியமானது. இதற்கு 12 முதல் 18 மாதங்கள் தேவைப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்..

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2521001  

Similar News