ராமேஸ்வரத்தில் “டாஸ்மாக்” திறக்க தடை! இந்து முன்னணி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு!
ராமேஸ்வரத்தில் “டாஸ்மாக்” திறக்க தடை! இந்து முன்னணி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு!
ராமேஸ்வரத்தில்
டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து ராமேஸ்வரத்தை
சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி ராமமூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல
வழக்கு தொடர்ந்தார்.
அதில் அவர்,
புனிதஸ்தலமான ராமேஸ்வரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும்,
இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராமேஸ்வரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க கூடாது என்று தடை வித்தித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.