ராணுவத்துக்கு சொந்தமான இடத்தை, ரூ.60 கோடிக்கு மெட்ரோ ரெயிலுக்கு விற்ற சி.எஸ்.ஐ சர்ச் நிர்வாகம்!!
ராணுவத்துக்கு சொந்தமான இடத்தை, ரூ.60 கோடிக்கு மெட்ரோ ரெயிலுக்கு விற்ற சி.எஸ்.ஐ சர்ச் நிர்வாகம்!!
ராணுவ அமைச்சகத்திற்கு சொந்தமான நிலத்தை, சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகம், முறைகேடாக ரூ.60 கோடிக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேஷனுக்கு விற்றுள்ளது. இது தொடர்பாக சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகம் மீது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் போலீசில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் நாகாவரா வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வெல்லாரா ரயில் நிலையம் அமைக்க பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிலம் தேடி வந்துள்ளது. மெட்ரோ ரயில் பணிகளுக்காக சர்ச்சுக்கு சொந்தமான 3618 சதுர மீட்டர் நிலத்தை மெட்ரோ பணிகளுக்காக வாங்க, சர்ச் நிர்வாகத்திற்கு ரூ.60 கோடி நிவாரண தொகையாக வழங்கப்பட்டது.
ஆனால் சர்ச் நிர்வாகம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறும் நிலம், உண்மையில் சர்ச்சுக்கு சொந்தமானது அல்ல. அந்த நிலம் மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமானது. இது தொடர்பான நிலஅளவை ஆவணங்களை சரிபார்த்தபோது சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகம் செய்த பித்தலாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
சிஎஸ்ஐ என்பது இந்தியாவின் 2-வது பெரிய கிறிஸ்தவ தேவாலய அமைப்பு. தென்னிந்தியாவில் மட்டும் சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகத்திற்கு சொந்தமானதாக கூறப்படும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி இருக்கும். இந்த அமைப்பு, பல்வேறு அமைப்புக்களிடம் இருந்து நன்கொடை மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.1000 கோடிகளை பெற்று வருகிறது. தென்னிந்தியாவில் சிஎஸ்ஐ சார்பில் 5000க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
முழுமையான விசாரணை நடத்தினால் சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகம் வசம் உள்ள மொத்த சொத்துக்களில் எவ்வளவு சொத்துக்கள் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டவை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.