சி.பி.எஸ்.இ கல்வித்திட்டத்தின் முன்னோடி, பத்மா சேஷாத்ரி கல்வி குழும தாளாளர் ராஜலட்சுமி பார்த்தசாரதி மரணம்!! முதல்வர் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி
சி.பி.எஸ்.இ கல்வித்திட்டத்தின் முன்னோடி, பத்மா சேஷாத்ரி கல்வி குழும தாளாளர் ராஜலட்சுமி பார்த்தசாரதி மரணம்!! முதல்வர் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி
சிபிஎஸ்இ கல்வித்திட்டத்தின் முன்னோடியும், ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை பொற்காலமாக்கிய கல்வியாளர் ராஜலட்சுமி பார்த்தசாரதி(93), மாரடைப்பால் இன்று(ஆக.,6) சென்னையில் காலமானார். மறைந்த ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவியும், ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாருமானவர் இவர், பத்மா சேஷாத்ரி கல்வி குழுமத்தை உருவாக்கி அதன் தாளாளராக இருந்தார்.
வயது மூப்பால் சிகிச்சை பெற்று வந்த இவர், கிரீம்ஸ் சாலையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு,கல்வியாளர்கள், நாடக மற்றும் திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 1925ம் ஆண்டு நவ.,8ல் பிறந்தவர் ராஜலட்சுமி பார்த்தசாரதி. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தவர், சிலகாலம் பத்திரிகை துறையில் பணியாற்றினார். 1958ம் ஆண்டு சென்னை, நுங்கம்பாக்கத்தில் 13 குழந்தைகளுடன் பள்ளியை ஆரம்பித்தார். நாளடைவில், பத்மா சேஷாத்ரி பாலா பவன் என்ற மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்யமாக விரிவடைந்தது. தற்போது இந்த குழுமத்தின் பள்ளியில் சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்இ கல்வி திட்டம் அமைய இவரும் முக்கிய பங்காற்றினார்.
கல்வி சேவைக்காக, 2010ம் ஆண்டின் பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார். இவர் சிறந்த பத்திரிகையாளராகவும் விளங்கியவர்.
முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் , நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளர் அனிருத் உட்பட ஏராளமான பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.