இந்த தீபாவளியை நமது பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணித்து, சாதனைகளை கொண்டாட வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி

இந்த தீபாவளியை நமது பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணித்து, சாதனைகளை கொண்டாட வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி

Update: 2019-10-16 06:50 GMT


அரியானா சட்டசபைக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், சர்கி தாத்ரியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.  à®ªà¯†à®£à¯ பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரியானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இந்த முறை நமக்கு தீபம் கொண்ட தீபாவளி மற்றும் தாமரை கொண்ட தீபாவளி என இரண்டு வகையான தீபாவளி இருக்கிறது. இந்த தீபாவளியை நமது பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணித்து, அவர்களின் சாதனைகளை கொண்டாட வேண்டும். பெண் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமீபத்தில் சீன அதிபர் ஜின்பிங்கை நான் சந்தித்த போது, அவர், 'டங்கல்' திரைப்படத்தில் இந்தியாவின் குழந்தைகளின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக கூறினார். அரியானாவை நினைத்து பெருமை அடைகிறேன். இவ்வாறு மோடி பேசினார்.


Similar News