"கூடுதல் அரசு பங்களாவை காலி செய்யுங்கள்" - அடம்பிடிக்கும் முன்னாள் பிரதமர் தேவ கெளடாவுக்கு மீண்டும் நோட்டீஸ்!

"கூடுதல் அரசு பங்களாவை காலி செய்யுங்கள்" - அடம்பிடிக்கும் முன்னாள் பிரதமர் தேவ கெளடாவுக்கு மீண்டும் நோட்டீஸ்!

Update: 2019-10-28 05:57 GMT

டெல்லியில் முன்னாள் பிரதமர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்க சிறப்பான அரசு பங்களா தரப்பட்டுள்ளது. அரசு செலவில் உயர்வகை சிகிச்சைகளும், உதவிக்காக அரசு சிப்பந்திகளும் உண்டு. மேலும் உள்நாட்டு பயண செலவுகள், அலுவலக செலவுகள், எஸ்பிஜி பாதுகாப்பு மற்றும் இலவச மின்சாரம், தண்ணீர், தொலைபேசி வசதி ஆகியவையும் உண்டு.


சமீபத்தில் மரணம் அடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடைசி வரை அவருக்கு வழங்கப்பட்ட அரசு வீட்டில்தான் வசித்தார். அதன் பிறகு அவரது குடும்பத்தினர் ஒரு மாதத்தில் வீட்டை காலி செய்து சென்று விட்டனர்.


தேவே கவுடாவுக்கும் முன்னாள் பிரதமர் என்ற முறையில் டெல்லி சஃப்தர்ஜங் லேனில் பெரிய பங்களா வழங்கப்பட்டுள்ளது. என்றாலும், சென்ற மக்களவையில் அவர் எம்.பி-யாக இருந்தார். எனவே எம்.பி என்ற முறையில் மேலும் ஒரு பங்களாவை கேட்டு பெற்றுக் கொண்டார்.


ரஃபி மார்க்கில் உள்ள அந்த பங்களாவுக்கு அவர் செல்வதில்லை. கர்நாடகாவில் இருந்து அவரை பார்க்க வரும் உறவினர்களும், விருந்தினர்களும் தங்கும் இடமாக இன்றும் அது இருந்து வருகிறது.


சென்ற 2019 மக்களவை தேர்தலில் தேவே கவுடா தோற்றதால் இப்போது அவர் எம்.பி இல்லை. எனவே இந்த கூடுதல் பங்களாவை தேவே கவுடா முறைப்படி சென்ற ஜூன் மாதத்திலேயே காலி செய்து தந்திருக்க வேண்டும். ஆனால் நோட்டீஸ் முன்கூட்டியே அனுப்பப்பட்டும் இதுவரை அவர் காலி செய்யாததால் அந்த கூடுதல் பங்களாவை அவர் காலி செய்யக் கோரி மீண்டும் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதேபோல 25 முன்னாள் எம்.பி-க்களுக்கும் பங்களாவை காலி செய்ய அரசு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் இதுவரை காலி செய்யாமல் உள்ளார்கள். இதனால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி-க்கள் பலர் சரியான இடம் கிடைக்காமல் ஹோட்டல்களிலும், வெளியிலும் தங்கி வருகின்றனர்.


Similar News