மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்! பிரதமர் மோடி,அமித்ஷா வாழ்த்து!
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்! பிரதமர் மோடி,அமித்ஷா வாழ்த்து!
மஹாராஷ்டிராவில், நடந்த சட்டசபை தேர்தலில், பாஜ.கவுடன் கூட்டணியில் இருந்த சிவசேனாவின் ,ஆட்சியில் சமபங்கு கோரியதால் கூட்டணி முறிந்தது. இதனால், எந்த கட்சியும் பெரும்பாண்மை இல்லாததால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது ,பா.ஜ.க தனிபெரும்பான்மை கட்சியாக 105 இடங்களையும், சிவ சேனா கட்சி 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களையும் கைப்பற்றின.மகாராஷ்டிராவில் சிவசேனா ,தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி இணைந்து ஆட்சி அமைப்பது என்ன கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன ஆனால் சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக, பா.ஜ.க கட்சியின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாரும் மும்பையில் ஆளுநர் மாளிகையில் இன்று காலை பதவி ஏற்றனர்.முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னவிஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.