சுதந்திர தினத்தன்று, லடாக்கில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தோனி!!
சுதந்திர தினத்தன்று, லடாக்கில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தோனி!!
ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று லடாக்கில் உள்ள லே நகரில் நடைபெறும் சுதந்திரத்தின விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370-வது பிரிவை மோடி அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக்கின் லே நகரில் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் இந்தியத் தேசிய கொடியை தோனி ஏற்றுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தோனி கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவ பாரசூட் ரெஜிமெண்டில் லெப்டினெண்ட் பதவி வகித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ராணுவத்தில் இணைந்து பயிற்சியும் பெற்று வந்தார்.