கூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க 315 கோடி ரூபாய் கொடுத்ததா? அமலாக்கத்துறை அலசுகிறது! கதிகலங்கிபோய் உள்ளது தி.மு.க!!
கூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க 315 கோடி ரூபாய் கொடுத்ததா? அமலாக்கத்துறை அலசுகிறது! கதிகலங்கிபோய் உள்ளது தி.மு.க!!
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக திமுக தன் 3 கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் 40 கோடி ரூபாய் லஞ்சமாக (நன்கொடை என்ற பெயரில்) கொடுத்துள்ளது. இது வங்கி பரிவர்தனை மூலம் வழங்கப்பட்டுள்ள தொகை.
பாராளுமன்ற தேர்தலில் திமுக செலவு செய்த தொகையின் விவரங்களை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 27-ஆம் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அந்த கட்சி தாக்கல் செய்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், 79 கோடியே 26 லட்சத்து 10 ஆயிரத்து 482 ரூபாய் செலவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதில் 40 கோடி ரூபாய், கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாயும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 15 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
இது தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உண்டியல் குலுக்கி, பிச்சைக்காரர்களைகூட விட்டு வைக்காமல் வசூல் செய்வதை காலங்காலமாக செய்து வருகின்றன. மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினர், தாங்கள்தான் ஏழைகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்று அப்பாவி மக்களை நம்ப வைத்து வந்தனர். ஏழைகளின் கட்சி என்று வெளியுலகிற்கு காட்டி கபட நாடகம் நடத்தி வந்தவர்களின் முகத்திரை இப்போது கிழிந்துள்ளது.
ஆனால் ஒரு பாராளுமன்ற தேர்தலில் மட்டும் இவர்கள் 25 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளனர். இது வெளிச்சத்து வந்த தொகை மட்டுமே. திமுக சார்பில் கணக்கில் காட்டப்பட்ட தொகை என்பதால், இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அது மட்டுமல்ல கறுப்பு பணமாக எவ்வளவு தொகை கைமாறியது என்பது இன்னும் வெளியாகவில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைவிட, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் பெரியது. தொகுதி பங்கீட்டில் எப்போதுமே அதிகமான இடங்கள் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் ஒதுக்கப்படும்.