தீபாவளியை முன்னிட்டு ஏழைகளுக்காக ஒரு ரூபாய்க்கு சட்டை, 10 ரூபாய்க்கு நைட்டி விற்ற வண்ணாரப்பேட்டை வர்த்தகர்!

தீபாவளியை முன்னிட்டு ஏழைகளுக்காக ஒரு ரூபாய்க்கு சட்டை, 10 ரூபாய்க்கு நைட்டி விற்ற வண்ணாரப்பேட்டை வர்த்தகர்!

Update: 2019-10-28 14:26 GMT

வசதி குறைந்தவர்களும் புத்தாடை அணிந்து தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சென்னையைச் சேர்ந்த துணி வியாபாரி ஒருவர். ஒரு ரூபாய்க்குச் சட்டையையும் பத்து ரூபாய்க்கு ‘நைட்டி’யையும் விற்க, à®…தனால் பலனடைந்த பலரும் அவரை வாழ்த்திச் சென்றனர்.


சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த், à®‡à®®à¯à®®à®¾à®¤à®®à¯ 19-ஆம் தேதி முதல் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார். தம்மால் மற்ற வியாபாரிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில், à®¨à®¾à®³à¯à®¤à¯‹à®±à¯à®®à¯ காலையில் ஒரு மணி நேரம் மட்டும் இதுபோல வழங்கி வருவதாக அவர் கூறினார்.


நாளொன்றுக்கு 200 à®ªà¯‡à®°à¯à®•à¯à®•à¯ ‘டோக்கன்’ வழங்கியதால் அதிகாலையிலேயே பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து துணிகளை வாங்கிச் சென்றனர். எதையும் இலவசமாகக் கொடுத்தால் அதற்கு மதிப்பு இருக்காது என்பதால் ஒரு ரூபாயை மட்டும் வாங்கிக்கொண்டு சட்டை விற்று வருவதாக ஆனந்த் குறிப்பிட்டார்.


Similar News