36 பிகில் புள்ளிங்கோகளுக்கு சிறையில் தீபாவளி.!

36 பிகில் புள்ளிங்கோகளுக்கு சிறையில் தீபாவளி.!

Update: 2019-10-26 04:59 GMT

கிருஷ்ணகிரியில் பிகில் படத்தின் நள்ளிரவு சிறப்பு காட்சி என்று ரசிகர் மன்றத்தால் அறிவித்து டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணி வரை சிறப்பு காட்சி நடைபெறவில்லை. இதனால் சில ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து பேரிகார்டுகளை அடித்து உடைத்தும், சாலையில் தூக்கி வீசியும் ரகளையில் ஈடுபட்டனர்


அத்தோடு நில்லாமல் சாலையோர வியாபாரிகளின் கடையை சூறையாடிய சிலர் அவர்களது பொருட்களை எல்லாம் எடுத்து சாலையில் தூக்கி வீசினர்,இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் பானை வியாபாரியின் கடையில் இருந்த மண் பானைகளை சாலையில் தூக்கி வீசி தங்களது சமூக அக்கறையை வெளிப்படுத்தினர்.


அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா களையும் காவல் தடுப்புகளையும் எடுத்து வீசி அட்டகாசம் செய்தனர்,போலீஸ் வாகனத்தின் மேல் பட்டாசுகளை வெடித்தும் ரகளையில் ஈடுபட்டனர்,நேரம் செல்ல செல்ல அவர்களின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே இருந்தது, அந்த பகுதியே கலவர பூமியானது. உடனடியாக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு லேசான தடியடி நடத்தி ரகளையில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர்.


பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக விஜய் ரசிகர்கள் 36 பேர் மீது, ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


https://www.news18.com/news/movies/vijays-fans-go-on-rampage-over-delay-in-bigil-screening-36-arrested-2362489.html


Similar News