விக்கிரவாண்டியில் தி.மு.க அராஜகம்! நூலிழையில் தப்பிய பொது மக்கள் - சரிந்து விழுந்த தி.மு.க அலங்கார வளைவு! எங்கே போனது மு.க.ஸ்டாலினின் வாய்ச்சவடால்?

விக்கிரவாண்டியில் தி.மு.க அராஜகம்! நூலிழையில் தப்பிய பொது மக்கள் - சரிந்து விழுந்த தி.மு.க அலங்கார வளைவு! எங்கே போனது மு.க.ஸ்டாலினின் வாய்ச்சவடால்?

Update: 2019-10-21 11:08 GMT

சென்னையில் அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் தனது மகன் திருமணத்திற்கு அனுமதி இன்றி வைத்த பேனரால் கோர விபத்து ஏற்பட்டு சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார். இந்த விபத்து இளைஞர்களிடையே ஏற்படுத்திய கொந்தளிப்பை அடுத்து தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால் தங்கள் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே போய் "தி.மு.க-வினர் பேனர் வைத்தால் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவே மாட்டேன்" என வாய்ச்சவடால் விட்டார்.


தங்கள் கட்சி எங்கும் பேனர் வைக்காது, பொது மக்களுக்கு தொந்தரவு தராது என அனைத்து தொலைகாட்சிகளிலும் கூவி கூவி சூளுரைத்த இதே தி.மு.க-வினர் விக்கிரவாண்டி துறையூர் வழுதாவூர் சாலையில் அலங்கார வரவேற்பு வளைவு ஒன்றை வைத்தனர். இடைத்தேர்தல் நேரம் என்பதால் கட்சிக்கு விளம்பரப்படுத்த இது செய்யப்பட்டது.


அதிர்ச்சிகரமாக தி.மு.க-வினர் வைத்த இந்த அலங்கார வளைவு சரிந்து விழும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி பொது மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய சேதம் ஏதும் நடைபெறாமல் சூதாரித்து கொண்டனர் வழிபோக்கர்கள். சில நொடிகள் தவறி இருந்தால் கூட இது மிகப்பெரிய விபத்தாக மாறி, உயிர் சேதம் அதிகரித்து இருக்கும் என இந்த வீடியோவை பார்த்தால் புரிகிறது.




https://twitter.com/SuryahSG/status/1186243015297261568?s=20


தி.மு.க-வினரால் பொது மக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது என சுபஸ்ரீ விபத்தின் போது கீழ்த்தர அரசியல் தேடிய மு.க.ஸ்டாலின் தற்போது எங்கே மறைந்திருக்கிறார் என சரமாரியாக தாக்கி வருகின்றனர் இணையவாசிகள்.


News Input from - News 18 Tamil


Similar News