மக்கள் பணத்தை கொள்ளையடித்த திமுக காங்கிரசுக்கு மோடியை பற்றி பேச அருகதை இல்லை - பா.ஜ.க ஐடி தலைவர் அதிரடி!!

மக்கள் பணத்தை கொள்ளையடித்த திமுக காங்கிரசுக்கு மோடியை பற்றி பேச அருகதை இல்லை - பா.ஜ.க ஐடி தலைவர் அதிரடி!!

Update: 2019-08-28 07:59 GMT

“ரூ.1,76,000 கோடி 2ஜி ஊழல் செய்த திருடர்களுக்கு மோடி அரசை குறை சொல்ல என்ன அருகதை இருக்கிறது?” என்று தி.மு.க - காங்கிரசுக்கு தமிழக பாஜக தகவல் தொடர்பு பிரிவு தலைவர் CTR.நிர்மல் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுதொடர்பாக, தமிழக பாஜக தகவல் தொடர்பு பிரிவு தலைவர், CTR.நிர்மல் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:-


ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய், சர்பிலஸ் அமண்ட் (Surplus amount) அதாவது உபரி நிதியை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு திரும்ப செலுத்தி இருக்கிறது இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கக்கூடிய சாதாரண நிகழ்வு.


மற்ற வங்கிகளைப் போல ரிசர்வ் வங்கி தன்னுடைய வருமானத்திற்கு வருமான வரி கட்டுவதில்லை. அதற்கு மாறாக மொத்த லாபத்தை உபரி நிதியாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக்கு திரும்ப அளிப்பது பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஒரு சாதாரண நடைமுறை. இந்த ஆண்டும் அதே போல 90,000 கோடி ரூபாய், உபரி நிதியை சேர்த்துதான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த நிதியாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.


இந்த உபரி நிதி எவ்வாறு வருகிறது என்றால் ரிசர்வ் வங்கியின் ஒட்டுமொத்த இருப்புநிலையில் (balance sheet), ரிசர்வ் வங்கி தொகை 26% மட்டுமே. இது சுமார் 8 லிருந்து 9 லட்சம் கோடி ரூபாய் வரையிலான தொகை.


இந்த 26% ரிசர்வ் தொகை வெளிநாட்டு கரன்சி, தங்கம் முதலியவற்றில் சந்தை மதிப்பிற்கு ஏற்ப வாங்கும் அல்லது விற்கும். இதன் மூலம் கிடைக்கும் வருமானமே சர்பிலஸ் அமவுண்ட், அதாவது உபரி நிதியாக காட்டப்படும்.


சென்ற வருடம் டாலர் மதிப்பு உயர்ந்த காரணத்தினால் கையிருப்பில் இருந்த டாலரை விற்றதால், அதிக லாபம் கிடைத்தது. இதனால் அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட சென்ற நிதி ஆண்டில் சர்பிலஸ் அமண்ட் 90000 கோடி ரூபாயாக இருந்தது.


அதுபோக இந்த வருடம் ஜலான் கமிட்டி, CF என சொல்லப்படும் கண்டின்ஜென்ஸி ஃபண்ட் Contingency Fund இருப்பை 5.5 சதவீத இருந்து 6.5 சதவீதம்வரை வைத்துக்கொள்ள பரிந்துரை செய்தது.


இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி இந்த நிதியாண்டில் 5.5% கையிருப்பு வைத்துக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் தற்போதைய கையிருப்பு 6.8 சதவீதம் உள்ளது.


இதனால், மீதமுள்ள 1.3 சதவீதத்தை சேர்த்து உபரி ரீதியாக மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி கொடுத்துள்ளது.


இந்த உபரி நிதி மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவது, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சாதாரண விதி.


இதை எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் பெரிதுபடுத்தி மக்களை குழப்ப பார்க்கின்றனர். 2ஜி ஊழல் செய்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அரசிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி டெல்லி முதல் கண்ணியாகுமரி வரை பங்கு போட்ட திருடர்களுக்கு, மக்கள் “சேவையே மகேசன் சேவை” என செயல்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சிக்க எந்த அருகதையும் கிடையாது.


கடந்த 5 ஆண்டுகளில், 10 கோடி இலவச கழிப்பிடங்களை கட்டி ஏழை பெண்களுக்கு வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. இதன் மூலம், அதுவரை திறந்த வெளியையே கழிப்பிடங்களாக பயன்படுத்தி வந்த ஏழைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி புதிய அத்தியாயத்தை எழுதினார் பிரதமர் நரேந்திர மோடி. அதேபோல “அனைவருக்கும் வீடு” போன்ற பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக இதுபோன்ற உபரி நிதி, பயன்படுத்தப்பட உள்ளது.


காங்கிரஸ், திமுக போன்ற ஊழல் கட்சியினரிடம், மக்கள் நலப் பணி, மக்கள் நலத் திட்டங்கள், போன்றவற்றைப் பற்றி பேசி எந்த பயனும் இல்லை.


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பற்றி எந்த வித புரிதலும் இல்லாமல் பேசிவிட்டு, பின்னர் பின் பின்வாங்கிய திமுக, இந்த விஷயத்திலும் எந்தவித அடிப்படை அறிவும் இல்லாமல் பேசி வருகிறது.


பல லட்சம் கோடி ரூபாய், தமிழக அரசின் பெயரில் கடன்வாங்கி, தமிழக நிதி நிலையை மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளி தங்களது சொந்த நிதியை பெருகிக்கொண்டே திமுகவினர், இன்று மத்திய ரிசர்வ் வங்கியிலிருந்து எடுக்கப்படும் உபரி நிதியை மக்கள் நலத் திட்டங்களுக்காக பயன்படுத்துவதை குறை சொல்வது மிக கேவலமான செயல்.


இவ்வாறு CTR.நிர்மல் குமார் குறிப்பிட்டுள்ளார்.


Similar News